SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுகவினர் 2 பேர் சிக்கினர்

4/18/2019 1:55:11 AM

சிதம்பரம், ஏப். 18: சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியில் பறக்கும்படையினர் சோதனையின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுகவினர் 2 பேர் சிக்கினர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் 11வது தெரு குருவய்யர் தெருவில் அதிமுகவினர் தேர்தலுக்காக பணம் வழங்குவதாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு பறக்கும்படையை சேர்ந்த குணபாலன் குழுவினர் அங்கு சென்றனர். அப்போது அங்கு அதிமுக கொடியுடன் ஒருவர் வீடு வீடாக சென்று பணம் வழங்கினார். இதையடுத்து அதிகாரிகள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை சோதனைபோட்டபோது அதில் ரூ.59 ஆயிரத்து 380 இருந்தது. அந்தப்பணத்தை அதிகாரிகள் மீட்டனர். பின்னர் வீடு வீடாக பணம் வழங்கிய காயத்ரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் (52) என்பவரை கையும் களவுமாக பிடித்து நகர போலீசிடம் ஒப்படைத்தனர். இதேபோல் அண்ணாமலை நகர் தெற்கிருப்பு பகுதியில் அதிமுகவினர் ஓட்டுக்காக பணம் வழங்குவதாக கிடைத்த தகவலையடுத்து பறக்கும்படை அதிகாரி பலராமன் மற்றும் குழுவினர் அங்கு சென்றபோது 3 இருசக்கர வாகனங்களில் 3 பேர் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியது தெரியவந்தது. அதிகாரிகளை கண்டதும் இருவர் தப்பியோடிவிட்டனர். ஒருவர் பிடிபட்டார். அவர் அண்ணாமலைநகர் தெற்கிருப்பு பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் செந்தில் (23) என தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம், வாக்காளர் பட்டியல் புத்தகம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அண்ணாமலை நகர் போலீசில் அவர் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • milkashake1111

    பிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்