SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடலூர் தொகுதி வேட்பாளர்கள் செலவின பதிவேடுகள் தாக்கல்

4/18/2019 1:54:55 AM

கடலூர், ஏப். 18: கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவினங்கள் தொடர்பான பதிவேடுகளை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செலவின பார்வையாளர்கள் பராக் மற்றும் மகாபீர் ஆகியோர் முன்னிலையில் தாக்கல் செய்தனர்.கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவின பதிவேடுகள் மீதான மூன்றாம் கட்ட ஆய்வுகள் தேர்தல் செலவின பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் ஆகியோரின் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன.
இந்த ஆய்வுகளில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தது முதல் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளுவதற்காக செலவிடப்பட்ட செலவினங்கள் தொடர்பான விவரங்கள், தேர்தல் செலவின கணக்குகள் மற்றும் பதிவேடுகளையும், வேட்பாளர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட முகவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. இதனை, கடலூர் மாவட்ட செலவின கணக்கு குழுவின் பதிவேடுகளுடன் தேர்தல் செலவின பார்வையாளர்களால் சரிபார்க்கப்பட்டது.இந்த ஆய்வில் 20 வேட்பாளர்கள் செலவின கணக்குகளை தாக்கல் செய்தனர். இதில் பங்கேற்காத வேட்பாளருக்கு தேர்தல் நடத்தும் அலுவலரால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.
உரிய விளக்கம் அளிக்காத சூழ்நிலையில் அவர் மீது இந்திய தேர்தல் ஆணையத்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர் மாவட்ட தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • milkashake1111

    பிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்