SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மின்வேலியில் சிக்கி முதியவர் பலி

4/18/2019 1:54:46 AM

மயிலம், ஏப். 18:  மயிலம் அடுத்த பெரமண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்மி(75), விவசாயி. இவர் நேற்று தனது ஆடுகளை வயல்வெளியில் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது இதே ஊரை சேர்ந்த சீத்தாபதி என்பவரின் நிலத்தில் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த நெல் நாற்றங்காலில் அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கியவர் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்த தகவல் அறித்த மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை  கைப்பற்றினர். அங்கு கூடியிருந்த உறவினர்கள், பிரேதத்தை எடுக்கக்கூடாது என ஆவேசமாக கூறியுள்ளனர். இது குறித்து உறவினர்கள் கொடுக்கும் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதன்பேரில், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்