SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பிரசாரம் ஓய்ந்தது

4/17/2019 6:46:46 AM

ஈரோடு, ஏப். 17:  ஈரோடு மக்களவை தொகுதிக்கான தேர்தல் 18ம்தேதி (நாளை) நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் கணேசமூர்த்தி, அதிமுக வேட்பாளர் வெங்கு மணிமாறன், அமமுக வேட்பாளர் செந்தில்குமார், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சரவணகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேட்சை வேட்பாளர் என 20 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் வேட்பாளர்கள் தங்களுக்கு வாக்கு கேட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில் வேட்பாளர்கள் வீதி, வீதியாக இறுதி கட்ட பிரசாரம் செய்தனர். இதில், ஈரோடு மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் கணேசமூர்த்தி நேற்று தனது இறுதிகட்ட பிரசாரத்தை தேர்தல் பணிமனையில் துவங்கினார். இப் பிரசாரத்தை ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் முத்துசாமி துவக்கி வைத்தார். தேர்தல் பணிமனையில் துவங்கிய பிரசாரம் சூரம்பட்டிநால்ரோடு, சங்குநகர், குமலன்குட்டை, சம்பத்நகர், மாணிக்கம்பாளையம், மூலப்பட்டறை, கிருஷ்ணா தியேட்டர், மணிக்கூண்டு, மரப்பாலம், காளைமாட்டு சிலை வழியாக பன்னீர்செல்வம் பார்க்கில் நிறைவடைந்தது.

இதில் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இருசக்கர வாகனத்தில் சென்று வேட்பாளர் கணேசமூர்த்திக்கு வாக்கு சேகரித்தனர். இதில், தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி, மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், மாவட்ட துணை செயலாளர்கள் செந்தில்குமார், சின்னையன், மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், தலைமை செயற்குழு செயற்குழு உறுப்பினர்கள் குமாரசாமி, மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ரவி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இதேபோல், அதிமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் வெங்கு மணிமாறன் தனது தேர்தல் இறுதி கட்ட பிரசாரத்தை ஈரோடு எம்.ஜி.ஆர் சிலை சிக்னல் பகுதியில் முடித்தார்.

இதில், அமைச்சர் கருப்பணன், எம்எல்ஏ.,க்கள் தென்னரசு, ராமலிங்கம், சிவசுப்ரமணியன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் மண்டலக்குழு தலைவர் மனோகரன், தமாகா மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், பாமக முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் ஆறுமுகம் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். அமமுக வேட்பாளர் செந்தில்குமார் கொங்கம்பாளையம், நரிப்பள்ளம், தண்ணீர்பந்தல்பாளையம், பெரியசேமூர், மாணிக்கம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பிரசாரம் செய்தார். இதில், மண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகவேலு, தொகுதி பொறுப்பாளர்கள் பவானிசம்பத், சிவசுப்ரமணியம், பொருளாளர் சண்முகம், எம்.ஜி.ஆர் இளைஞரணி மாவட்ட செயலாளர் ரமேஷ், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட தலைவர் சிவபிரசாத் உட்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.  இதேபோல், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சரவணகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் நேற்று தங்களது இறுதி கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • indo_red_ky111

  இது செவ்வாய் கிரகம் அல்ல!.. காட்டுத்தீ காரணமாக ரத்த சிவப்பு நிறமாக காட்சியளித்த இந்தோனேஷியா வான்பரப்பு

 • tower_denmark111

  டென்மார்க்கில் 45 மீட்டர் உயரத்தில் 1 கி.மீ. தூரம் சுழன்று செல்லும் படிக்கட்டுகளைக் கொண்ட டவர் : உற்சாகத்தில் சாகசப் பிரியர்கள்

 • nyuyark_hotelll1

  நியூயார்க்கில் ஏர்போர்ட் ஹோட்டல் : 512 சொகுசு அறைகளுடன் விமானத்தின் இறக்கைகளைப் போல வீற்றிருக்கும் பிரமாண்டம்

 • tapah_puyal11

  ஜப்பான், தென் கொரியாவை உலுக்கியெடுக்கும் சக்தி வாய்ந்த ‘தாபா’ புயல் : பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் வீடுகள் சேதம்

 • kenya_nairobi11

  கென்யா தலைநகர் நைரோபியில் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து : 7 குழந்தைகள் பலி ;57 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்