SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலம் காந்தி ஸ்டேடியத்தில் நடைபயிற்சி சென்றவர்களிடம் அதிமுக வேட்பாளர் வாக்குசேகரிப்பு

4/14/2019 2:48:03 AM

சேலம், ஏப்.14: சேலம் காந்தி ஸ்டேடியத்தில் நடைபயிற்சி சென்றவர்களிடம், அதிமுக வேட்பாளர் சரவணன் வாக்கு சேகரித்தார். சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணன், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் நேற்று ஓமலூர் தொகுதிக்குட்பட்ட கோட்டைமேடு, தாராபுரம், களர்காடு, கோட்டைமேடு, கஞ்சநாயக்கன்பட்டி, பூசாரிப்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அவருடன் முன்னாள் அமைச்சர் பொன்னையன், ஓமலூர் எம்எல்ஏ வெற்றிவேல், முன்னாள் எம்எல்ஏக்கள் சிவபெருமான், பல்பாக்கி கிருஷ்ணன், தமாகா மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார், பாமக மாவட்ட தலைவர் மாணிக்கம், சித்தேஸ்வரன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

நேற்று அதிகாலை நேரத்தில், சேலம் காந்தி ஸ்டேடியத்தில் நடைபயிற்சி சென்றவர்களிடம் வேட்பாளர் சரவணன், அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் எம்எல்ஏ ஆகியோர் வாக்கு சேகரித்தனர். அப்போது வேட்பாளர் சரவணன், ‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி, ஏழை மக்களின் காவலனாக விளங்கி வருகிறார். சேலத்தில் மேம்பாலங்களை கட்டி போக்குவரத்து நெரிசலை குறைத்துள்ளார். எனவே, தொடர்ந்து  நல்ல பல திட்டங்கள் சேலத்திற்கு செய்திடும் வகையில் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்,’ என்றார். அவருடன் பகுதி செயலாளர் யாதவமூர்த்தி உள்பட நிர்வாகிகள் சென்றிருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-06-2019

    21-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • adayaru_makkal_kumbha1

    அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் : பக்தர்கள் சாமி தரிசனம்

  • oranguttan_monkey111

    50வது பிறந்த நாளை பரிசுப் பெட்டிகளுடன் கேக் ருசித்து கொண்டாடிய ஓராங்குட்டான் குரங்கு

  • malai_vangam11196

    196 நாட்களுக்கு பிறகு சென்னையின் பல்வேறு இடங்களில் மழை : வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

  • amerikaa_aathal11

    900 மீட்டர் உயரம் கொண்ட பாறை மீது ஏறி 10 வயது அமெரிக்க சிறுமி அசத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்