SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்

4/14/2019 2:12:44 AM

பேரையூர், ஏப்.14:  பேரையூர் அருகே அதிகாரிபட்டி ஊராட்சி எ.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக ஆண்டிபட்டி-சேடபட்டி கூட்டு குடிநீர் வரவில்லை. மேலும் ஆழ்துளை கிணறு மூலம் கிடைக்க கூடிய தண்ணீரும் கிடைக்கவில்லை. இதனால் இந்த கிராமத்து மக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் யூனியன் ஆணையாளருக்கு பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கிராம மக்கள் ஆட்டோக்களில் குடிதண்ணீர் எடுக்க குடத்திற்கு ரூ.10க்கு எடுத்து வந்து தற்போதுள்ள பிரச்னையை தீர்த்து வந்துள்ளனர். மேலும் அருகிலுள்ள தோட்டங்களில் தண்ணீர் எடுத்து வந்துள்ளனர்.

இதுவரை நடவடிக்கை எடுக்காத ஊராட்சி மற்றும் யூனியன் நிர்வாகத்தை கண்டித்து நேற்று திடீரென பெண்கள் காலிக்குடங்களுடன் சின்னக்கட்டளை-டி.ராமநாதபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த ஊராட்சி செயலர், யூனியன் அதிகாரிகள், சாப்டூர் காவல்துறையினர், பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் குடிநீர் பிரச்னையைத் தீர்த்து வைப்பதாக உறுதியளித்தனர். அதன்பின்பு சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். ‘கிராமமக்கள் கூறுகையில், அதிகாரிகள் குடிநீர் பிரச்னையைத் தீர்க்காமல் காலம் தாழ்த்தினால், வீடுகள் தோறும் கருப்பு கொடிகள் கட்டி, வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-06-2019

    21-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • adayaru_makkal_kumbha1

    அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் : பக்தர்கள் சாமி தரிசனம்

  • oranguttan_monkey111

    50வது பிறந்த நாளை பரிசுப் பெட்டிகளுடன் கேக் ருசித்து கொண்டாடிய ஓராங்குட்டான் குரங்கு

  • malai_vangam11196

    196 நாட்களுக்கு பிறகு சென்னையின் பல்வேறு இடங்களில் மழை : வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

  • amerikaa_aathal11

    900 மீட்டர் உயரம் கொண்ட பாறை மீது ஏறி 10 வயது அமெரிக்க சிறுமி அசத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்