SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய,மாநில அரசுகளால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நடிகை குஷ்பு பேச்சு

4/14/2019 2:12:26 AM

அலங்காநல்லூர், ஏப். 14:  அலங்காநல்லூரில் நடிகை குஷ்பு தேனி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது, ‘‘மத்திய, மாநில அரசுகளால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. பொள்ளாச்சி சம்பவத்தால் உலக அளவில் தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்தது போல் வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ராகுல் காந்தி தலைமையில் அமையவுள்ள மத்திய காங்கிரஸ் ஆட்சியில் விவசாய கடன், கல்வி கடன், நீட் தேர்வு போன்றவை ரத்து செய்யப்படும்.

அதேபோல் ஏழை நடுத்தர மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகள் பேரில் மாதம் ரூ.6ஆயிரம் வீதம் வருடத்திற்கு ரூ.72,000 வங்கி கணக்கில் செலுத்தப்படும். பிரதமர் மோடியை போல் பொய்யான அறிக்கைகள் மூலம் ராகுல்காந்தி மக்களை ஏமாற்ற மாட்டார். எனவே மக்களுக்கு நன்மை செய்யாத மத்திய, மாநில அரசுகளை அகற்ற திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்று பேசினார்.
இதில் திமுக ஒன்றிய செயலாளர் கென்னடி கண்ணன், காங்கிரஸ் வட்டார தலைவர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-06-2019

    21-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • adayaru_makkal_kumbha1

    அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் : பக்தர்கள் சாமி தரிசனம்

  • oranguttan_monkey111

    50வது பிறந்த நாளை பரிசுப் பெட்டிகளுடன் கேக் ருசித்து கொண்டாடிய ஓராங்குட்டான் குரங்கு

  • malai_vangam11196

    196 நாட்களுக்கு பிறகு சென்னையின் பல்வேறு இடங்களில் மழை : வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

  • amerikaa_aathal11

    900 மீட்டர் உயரம் கொண்ட பாறை மீது ஏறி 10 வயது அமெரிக்க சிறுமி அசத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்