SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறப்பு முகாம் மூலம் சேர்க்கப்பட்ட புதிய வாக்காளர்கள் வாக்களிக்கலாம்

4/12/2019 5:40:10 AM

கோவை, ஏப். 12: மக்களவை தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 13 ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்குப்பதிவு செய்யலாம் எனவும் கோவை மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் மூலம் 43 ஆயிரத் 153 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.கோவை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளில் 14 லட்சத்து 38 ஆயிரத்து 442 ஆண் வாக்காளர்களும், 14 லட்சத்து 66 ஆயிரத்து 331 பெண் வாக்காளர்களும், 341 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 29 லட்சத்து 5 ஆயிரத்து 114 வாக்காளர்கள் உள்ளனர். இதில் கடந்த மாதம் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் 43 ஆயிரத்து 153 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனிடையே புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 43 ஆயிரத்து 153 வாக்காளர்களையும் சேர்த்து சுமார் 69 ஆயிரம் வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே வாக்காளர் அடையாள அட்டை கிடைக்க பெறாதவர்கள் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 13 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தில் 69 ஆயிரம் வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வினியோகிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் எத்தனை வாக்காளர்களுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளன என்கிற விபரம் இல்லை. வாக்காளர் அடையாள அட்டை கிடைக்க பெறாதவர்கள் தங்களுக்கு கிடைக்க பெற்றுள்ள பூத்சிலிப்புடன் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆதார் அட்டை, கடவுச்சீட்டு, பான்கார்டு, ஓட்டுநர் உரிமம், வங்கி மற்றும் தபால் அலுவலகங்கள் சார்பில் வழங்கப்பட்டுள்ள கணக்கு புத்தகங்கள் உள்ளிட்ட 13 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்களாம்,’’ என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்