SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெள்ளிங்கிரி மலை ஏற பக்தர்கள் குவிகின்றனர்

4/12/2019 5:40:01 AM

தொண்டாமுத்தூர், ஏப்.12: கோவையை அடுத்துள்ள பூண்டி வெள்ளிங்கிரி மலைக்கு ஏறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பூண்டி வெள்ளிங்கிரி மலையானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. 7 கி.மீ தொலைவிலான இவ்வழித்தடத்தில் செங்குத்தான 6 மலைகளை கடந்து செல்ல வேண்டும். 7வது மலையில் பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு குகையில் உள்ள பஞ்சபூத சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்வது வழக்கம்.ஆண்டு தோறும் கோடை காலமான பங்குனி, சித்திரை மற்றும் வைகாசி மாதத்தின் போது கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, நாமக்கல், சேலம் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து 7 மலைகள் ஏறி சுயம்பு லிங்கத்தை தரிசிப்பது வழக்கம்.

பங்குனி உத்திரத்தை தொடர்ந்து பக்தர்கள் நாள்தோறும் பூண்டி மலை அடிவாரத்தில் இருந்து கிரிவலம் மேற்கொள்ள மலையேறி வருகின்றனர். சனி, ஞாயிறு வார விமுறை தினங்களில் பக்தர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உள்ளது. மலையேறும் பக்தர்கள் பீடி, சிகரெட், புகையிலை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களும் பிளாஸ்டிக் பைகளை எடுத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பூண்டி மலை அடிவாரத்திலேயே பக்தர்களை வனத்துறையினர் முழுமையாக பரிசோதித்த பின்னரே வனப்பகுதிக்குள் அனுமதிக்கின்றனர். மலை ஏறுவதற்கு வசதியாக மூங்கில் தடி வழங்கப்பட்டு வருகிறது.

கோடை வெயில் தற்போது அதிகரித்து வருவதால் பக்தர்கள் மாலை மற்றும் இரவு நேரம் மலை ஏறுவதையே அதிகம் விரும்புகின்றனர். மேலும் அதிகாலைக்குள் மலையை விட்டு கீழே இறங்க திட்டமிட்டு அதற்கு தகுந்தாற் போல டார்ச் லைட்டுடன் மலையேறி வருகின்றனர்.தற்போது கோடை வெயில் கொளுத்தும் காரணமாக மரம், செடி, கொடி போன்றவை காய்ந்து கருகி நிற்கிறது. இதனால் காட்டு தீ அபாயமும் உள்ளதால் 7 மலைகளிலும் வனத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.கிரிவலம் முடித்து வரும் பக்தர்களுக்கு வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலில் சுக்குகாபி, நீர்மோர், சிற்றுண்டி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகி

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்