SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மூதாட்டியிடம் நகை திருட்டு; பெண் கைது

4/12/2019 5:39:53 AM

கோவை, ஏப்.12: சத்தியமங்கலம் வடக்கு பேட்டையை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவருடைய மனைவி வள்ளியம்மாள்(70). இவர் நேற்று முன் தினம் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அன்னூருக்கு வந்தார். அவர் பஸ் நிலையத்தில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்த பெண் ஒருவர் வள்ளியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 2.5 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி ஓட பார்த்தார். ஆனால் சுதாரித்து கொண்ட வள்ளியம்மாள் அவரை பஸ் நிலையத்தில் கூடியிருந்தவர்களின் உதவியுடன் பிடித்தார்.

இதனை தொடர்ந்து அந்த பெண் அன்னூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் மதுரை மாட்டுத்தாவணி ஆத்துமேட்டை சேர்ந்த பாத்திமா(29) என்பது தெரியவந்தது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருடைய கணவர் ராஜூ வீட்டில் சண்டையிட்டு கொண்டு கோவை மேட்டுப்பாளையம் வந்துள்ளார். அவரை தேடி தான் வந்ததாகவும், கையில் இருந்த பணம் செலவானதால் திருடியதாகவும் போலீசாரிடம் அவர் தெரிவித்தார். இதையடுத்து பாத்திமாவை போலீசார் கைது செய்தனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்