SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவை பா.ஜ வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்

3/26/2019 6:17:23 AM

கோவை, மார்ச்26: கோவை மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சி.பி  ராதாகிருஷ்ணன் நேற்று கோவை கலெக்டர் ராசாமணியிடம் வேட்பு  மனு தாக்கல் செய்தார். கோவை மக்களவை  தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் சி.பி.  ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவர் நேற்று கோவை மாவட்ட கலெக்டர்  ராசாமணியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது வேட்பு மனுவை அதிமுக  எம்.எல்.ஏக்கள் அருண்குமார்(கோவை வடக்கு), அம்மன் அர்ச்சுனன்(கோவை  தெற்கு) மற்றும் பா.ஜ.க பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், தேமுதிக மாநகர்  மாவட்ட செயலாளர் காட்டன் செந்தில் ஆகியோர் முன்மொழிந்தனர். சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி சுமதி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

 கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட சுயேட்சை வேட்பாளர்களாக கிருஷ்ணன்(49), பகுஜன் சாமஜ் கட்சி வேட்பாளர் கோவிந்தன்(59) . தமிழ்நாடு இளைஞர் கட்சியை சேர்ந்த  மணிகண்டன்(32). நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கல்யாணசுந்தரம்(35), மக்கள்  நிதி மய்யம் வேட்பாளர் மகேந்திரன்(56) ஆகியோரும் கோவை  மாவட்ட கலெக்டர் ராசாமணியிடம் நேற்று மனு தாக்கல் செய்தனர்.  பொள்ளாச்சி: பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் போட்டியிட அகில பாரத குடும்பர் குறுமி சத்திய மகாசபை சார்பாக மணி(61), அன்சாரி(40), சுந்தர்ராஜன்(46), மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மூகாம்பிகை (40) ஆகியோர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • church_cathdral11

    நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

  • apolo_50vinkalam1

    நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

  • 18-07-2019

    18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்