SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மா.கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர் நடராஜன் மனு தாக்கல்

3/26/2019 6:17:16 AM

கோவை, மார்ச் 26: கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பி.ஆர் நடராஜன் கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணியிடம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். கோவை மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியை சேர்ந்த பி.ஆர் நடராஜன் போட்டியிடுகிறார். அவர் நேற்று கோவை  மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கோவை கலெக்டரும், மாவட்ட தேர்தல்  அதிகாரியுமான ராசாமணியிடம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது வேட்பு  மனுவை திமுக சொத்து பாதுகாப்பு குழு தலைவரும், முன்னாள் அமைச்சருமான  பொங்கலூர் பழனிசாமி, சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ  கார்த்திக், மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் மோகன்குமார், காங்கிரஸ் புறநகர்  மாவட்ட செயலாளர் மனோகரன் ஆகியோர் முன்மொழிந்தனர்.

அதே போல் பி.ஆர் நடராஜனுக்கு மாற்று வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த பத்மாநாபன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த  ஜி.ஆர் ராமகிருஷ்ணன், வி.எஸ் சுந்தரம், ஜெயபால் ஆகியோர் முன்மொழிந்தனர்.
அதன் பின் நிருபர்களுடம் பி. ஆர் நடராஜன் கூறியதாவது :கோவை மாவட்டத்தில் அமைதி பாதுகாக்கப்பட வேண்டும். அமைதி இருந்தால் தான் மாவட்டம் வளர்ச்சி பெறும். அமைதியை பாதுகாக்க சுத்தி அரிவாள் நட்சத்திர சின்னத்தில் வாக்களியுங்கள். ஜி.எஸ்.டியால் கோவை மாவட்ட சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் ஜி.எஸ்.டியில் மாற்றம் கொண்டுவரப்படும், ஜாப் ஆர்டர் பணிகளுக்கு ஜி.எஸ்.டி ரத்து செய்யப்படும். மாவட்டத்தில் தொழிற்துறையினருக்கு அடுத்து விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. விவசாயம் பாதுகாக்கப்படும், விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்லப்படும், கெயில் எரிவாயு குழாய், உயர் மின் கோபுரங்கள் ஆகியவை மாற்று பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்படும்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது கண்டிப்பாக நிறைவேற்றப்படும். கோவையை வாழ்க்கை தரம் உயர்ந்த மாவட்டமாக மாற்ற பாடுபடுவோம். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும்.மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாக்கப்படும். வனவிலங்குகள் வழிதடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்படும். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் கோவை மாவட்ட மக்களுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.  7 ஆண்டுகளாக பொள்ளாச்சி பகுதியில் பணிபுரிந்த காவல்துறையினரை விசாரணை செய்ய வேண்டும். அதிமுக ஆட்சியை அகற்றிவிட்டு விசாரணை மேற்கொண்டால் அது நியமாக நடைபெறும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, நாடு வளம் பெற தற்போது உள்ள மத்திய, மாநில அரசுகளை அகற்றியாக வேண்டும்.இவ்வாறு பி.ஆர்.நடராஜன் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • church_cathdral11

  நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

 • apolo_50vinkalam1

  நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

 • 18-07-2019

  18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • intelexopchina17

  சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்