SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒற்றுமையாக களப்பணியாற்றுங்கள்

3/26/2019 6:16:50 AM

கோவை, மார்ச் 26: ஒற்றுமையாக களப்பணியாற்ற வேண்டும் என பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.கோவை மாவட்டம் பொள்ளாச்சி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் மகேந்திரன் அறிமுக கூட்டம் கோவைப்புதூர் சின்னசாமி திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கோவை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், தமிழக உள்ளாட்சி துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி, வேட்பாளரை அறிமுகம் செய்துவைத்தார். பின்னர், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
இத்தேர்தலில் அதிமுக தலைமையின்கீழ் பலமான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை, பொள்ளாச்சி தொகுதிக்கு மட்டுமின்றி, கோவை மாவட்டம் முழுவதும் மகேந்திரன் கொண்டுவந்துள்ளார். பொள்ளாச்சி ரோடு விரிவாக்கம், பாலக்காடு பிரதான சாலை விரிவாக்கம் ஆகிய பணிகளை மகேந்திரன் செய்துகொடுத்துள்ளார்.

பொள்ளாச்சியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க தனது சொந்த நிலம் 5 ஏக்கர் வழங்கியுள்ளார். எண்ணற்ற திட்டங்களை கோவை மாவட்டத்துக்கு தமிழக முதல்வர் அளித்துள்ளார். நம், நாட்டின் பாதுகாப்பு முக்கியம். எனவே, மத்தியில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ ஆட்சி அமைவது உறுதி.நம் கட்சி தொண்டர்களுக்குள் ஏதேனும் மனக்கசப்பு இருந்தால், அதை மறந்து, ஒற்றுமையாக களப்பணியாற்ற வேண்டும். வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும்.இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.கூட்டத்தில், பா.ஜ சார்பில் வசுந்தராஜ், கருமுத்து தியாகராஜன், த.மா.கா சார்பில் குனியமுத்தூர் ஆறுமுகம், சி.ஆர்.ரவிச்சந்திரன், தேமுதிக சார்பில் தியாகராஜன், சம்பத், அதிமுக சார்பில் மணிமேகலை உள்பட பலர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-06-2019

    27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்