SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓட்டு எண்ணிக்கை மையங்களில் கட்டுப்பாடு

3/26/2019 6:16:43 AM

கோவை, மார்ச் 26: கோவை, பொள்ளாச்சி தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை மையங்களில் ஏஜன்ட், அலுவலர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கோவை பாராளுமன்ற தொகுதிகளுக்கு தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியும், பொள்ளாச்சி தொகுதிக்கு மகாலிங்கம் கல்லூரியும் எண்ணிக்கை மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மையங்களுக்கு செல்ல ஏஜன்ட் மற்றும் அலுவலர்கள், ஊழியர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், ஓட்டு மெசின்கள் டார்க் ரூம் பகுதியில் வைக்கப்படும். இந்த அறை பூட்டி சீல் வைத்த பின்னர் எண்ணிக்கை நாளில் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர், பார்வையாளர் முன்னிலையில் திறக்கப்படவேண்டும். போலீசார் 24 மணிநேர காவல் பணியில் ஓட்டு மெசின் அறை முன் ஈடுபட்டிருப்பார்கள். வேட்பாளர்கள், ஏஜன்டுகள் இந்த அறையின் முன் இருக்க அடையாள அட்டை பெறவேண்டும். ஏஜன்டுகள் சுழற்சி முறையில் காத்திருக்கலாம்.

எண்ணிக்கை நடக்கும் நாளில், தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிக்கும் எண்ணிக்கையில் சுற்றுக்கள் நடத்தலாம். 15 அல்லது அதற்கு மேலான சுற்றுக்களில் ஓட்டு எண்ணிக்கை நடத்த அனுமதி உண்டு. 15 டேபிள் அமைத்து ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும். ஒவ்வொரு டேபிளுக்கும் வேட்பாளர்கள் சார்பில் அவர்களது ஏஜன்ட் பங்கேற்கலாம். இதற்கு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து அனுமதி சீட்டு பெறப்பட்டிருக்கவேண்டும். அனுமதி சீட்டு பெற்றவர்கள் குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதியில் ஓட்டு எண்ணிக்கையை பார்வையிடலாம். வேறு பிளாக்கில் வேறு சட்டமன்ற தொகுதியில் ஓட்டு எண்ணிக்கையை பார்வையிட செல்ல அனுமதி கிடையாது.  ஓட்டு எண்ணிக்கையின் ேபாது செல்போன் பயன்படுத்த கூடாது. எண்ணிக்கையை வீடியோ எடுத்து வாட்ஸ் அப், பேஸ்புக் போன்றவற்றில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. நடத்தை விதிகளை தேர்தல் பணியில் உள்ள அலுவலர்கள் பின்பற்றவேண்டும். ஓட்டு எண்ணிக்கை விவரங்கள் தேர்தல் கமிஷன் வெப்சைட்டில் உடனடியாக பதவிவேற்றம் செய்யப்படும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்