SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரங்கத்தில் கட்சி கொடிகம்பத்தை அகற்ற முயன்ற அதிகாரிகளை திகவினர் முற்றுகை

3/26/2019 5:53:14 AM

திருச்சி, மார்ச் 26:  திருச்சி ரங்கத்தில் திக கொடிகம்பத்தை முன்னறிவிப்பின்றி அகற்ற முயன்ற தேர்தல் அதிகாரிகளை திகவினர் தடுத்து முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி ரங்கத்தில் பெரியார் சிலை உள்ளது. இந்த சிலை இருக்கும் பகுதியில் திக கொடிகம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் நேற்று முன்னறிவிப்பின்றி கொடிகம்பத்தை அகற்றுவதற்காக பணியாளர்களுடன் மூன்று வாகனங்களில் வந்தனர். அப்போது பணியாளர்களை கொடிக்கம்பத்தை அகற்ற முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் திரண்டு தேர்தல் அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

அப்போது தேர்தல் அதிகாரிகள் கருப்பு நிறத்தில் கம்பம் உள்ளது. இதனால் இதை அகற்றுகிறோம். அது மட்டுமல்ல கட்சி கொடிக்கம்பங்கள் எங்கிருந்தாலும் அதனை அகற்றி வருகிறோம் என தெரிவித்தனர். இதற்கு திராவிடர் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் தேர்தல் தொடர்பாக நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டங்களுக்கு எங்களுக்கு அழைப்பில்லை. நாங்கள் எந்த சின்னத்திலும் போட்டியிடவில்லை. பெரியார் சிலை அமைந்துள்ள இடம் முறையாக பணம் கட்டி பெரியாரின் சுயமரியாதை பிரசாரத்திற்காக வாங்கப்பட்டது. எங்கள் இடத்தில் எந்தவித அறிவிப்பும் கொடுக்காமல் வந்து கொடி கம்பத்தை எப்படி அகற்ற வரலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. உடனடியாக இதுகுறித்து ரங்கம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு ஸ்ரீரங்கம் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். அதன்பின்பு கொடிகம்பத்தை அப்புறப்படுத்தக்கூடாது, அதனை நாங்களே அப்புறபடுத்திக்கொள்கிறோம் என திராவிட கழகத்தினர் கூறினர். இதனை ஏற்றுக்கொண்டு தேர்தல் அதிகாரிகள் அங்கிருந்து சென்று விட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

  • londonprotest

    லண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்

  • 23-04-2019

    23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்