SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுராபுரி ஊராட்சி 3வது வார்டில் அடிப்படை வசதிகளை செய்துதராவிட்டால் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் ஒன்றிய அலுவலரிடம் மனு

3/26/2019 5:53:05 AM

துறையூர், மார்ச் 26:  துறையூர் அருகே உள்ள மதுராபுரி ஊராட்சி 3வது வார்டில் அடிப்படை வசதிகளை செய்துதராவிட்டால் மக்களவை தேர்தலை புறக்கணிப்போம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர் சகுந்தலாவிடம் மதுராபுரி ஊராட்சி 3வது வார்டு பகுதி மக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில்: மதுராபுரி ரேஷன்கடை அருகே உள்ள காவிரி குடிநீர்குழாயில் பல மாதங்களாக தண்ணீர் வரவில்லை. இதனை சரி செய்து உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும். வீட்டு குடிநீர் இணைப்புகளில் குறைந்த அளவே தண்ணீர் வருகிறது. அதனை சரி செய்து சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும். புதிதாக கட்டப்பட்ட 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தொக்க தொட்டி அமைத்து பல வருடங்கள் ஆகியும் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இதில் அரசு பணம் விரையம் ஆகிறது. இதனால் மேல்நிலை நீர்தோக்க தொட்டியை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

மதுராபுரி நூலகம் அருகே குப்பைகள் தேங்கி கிடப்பதால் சுகாதாரகேடு ஏற்படுகிறது. உடனடியாக குப்பை தொட்டி வைக்க வேண்டும். கதிரவன் பட்டறையிலிருந்து மதுராபுரி ரேஷன்கடைக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் சாலையை சீரமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். மேலும் தங்களின் கோரிக்கைகளை வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்பதாக கூறினர். மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் சகுந்தலா இன்னும் ஓரிரு நாளில் புதிதாக போர்வெல்அமைத்து குடிநீர்வழங்க ஏற்பாடு செய்யப்படுவதாக கூறினார். அதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

  • fire

    லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்