SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ர்தலில் ரஜினியின் ஆதரவு எந்த கட்சிக்கும் இல்லை சத்தியநாராயணராவ் பேட்டி

3/26/2019 5:52:32 AM

தேதிருச்சி, மார்ச் 26:  தேர்தலில் ரஜினிகாந்த் ஆதரவு யாருக்கும் இல்லை என அவரது சகோதரர் சத்தியமூர்த்தி நாராயணராவ் நிருபர்களிடம் தெரிவித்தார்.புதுக்கோட்டை மாவட்ட ரஜினிமன்ற நிர்வாகியாக இருப்பவர் குமாரமங்கலத்தை சேர்ந்த புஷ்பராஜ். தீவிர ரஜினி ரசிகரான இவர் குமாரமங்கலத்தில் தனது சொந்த இடத்தில் ரஜினிகாந்தின் பெற்றோரான ராணுஜிராவ்-ராம்பாய் ஆகியோருக்கு மணிமண்டபம் கட்டியுள்ளார். இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் ரஜினிகாந்த்தின் அண்ணன் சத்தியநாராயணராவ் கெய்க்வாட் கலந்துகொண்டு பெற்றோரின் மணிமண்டபத்தை திறந்து வைத்தார். இதில் ரஜினி ரசிகர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக சத்தியநாராயணராவ் கெய்க்வாட் அளித்த பேட்டி: எங்களது பெற்றோர் தமிழகத்தில் நாச்சிகுப்பத்தில் பிறந்தவர்கள். அவர்களுக்கு 4 மகன்கள். தற்போது அவர்களுக்கு மணிமண்டபம் கட்டிய புஷ்பராஜை சேர்த்து 5 மகன்கள். எங்களது பெற்றோர் பிழைப்புக்காக பெங்களூர் சென்றனர். பின்னர் கிருஷ்ணகிரி, வேலூர், தஞ்சை, திருச்சியில் வாழ்ந்து வந்தனர். இதன் நினைவாக புஷ்பராஜ் மணிமண்டபம் கட்டியுள்ளார்.ரஜினிகாந்த் தமிழக மக்களுக்கு ஏதாவது நல்லது செய்து வேண்டும் என்று நினைக்கிறார். விரைவில் அதை செய்வார். தற்போது நடைபெற உள்ள தேர்தலில் யாருக்கும் அவரது ஆதரவு இல்லை. நல்லவர்களை பார்த்து தெரிந்து புரிந்து ஓட்டுபோடுங்கள். பணத்தாசை காட்டுபவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள் என அவர் கூறியுள்ளார். இந்த மணிமண்டபத்தை பார்க்க 15 நாட்களில் ரஜினிகாந்த் குமாரமங்கலம் வருவார் என்று கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • church_cathdral11

    நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

  • apolo_50vinkalam1

    நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

  • 18-07-2019

    18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்