SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சி, புதுகையில் 28ம்தேதி சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் கே.என்.நேரு தகவல்

3/26/2019 5:52:26 AM

திருச்சி, மார்ச் 26: வருகிற 28ம் தேதி திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் சட்டமன்ற தொகுதிகளுக்கான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், ரங்கம் ஆகிய சட்டமன்ற தொகுதி  செயல்வீரர்கள் கூட்டம் திருச்சியில் வருகிற 28ம் தேதி (வியாழக்கிழமை) காலை நடைபெறுகிறது. இதேபோல் புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளுக்கான செயல்வீரர்கள் கூட்டம் வருகிற 28ம் தேதி மாலை 4 மணிக்கு புதுக்கோட்டையிலும் நடைபெறுகிறது. தொடர்ந்து 29ம் தேதியிலிருந்து வாக்கு சேகரிக்கும் பணி துவங்கி தொடர்ந்து நடைபெறும் என்று கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • church_cathdral11

    நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

  • apolo_50vinkalam1

    நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

  • 18-07-2019

    18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்