SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

3 சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

3/22/2019 1:25:25 AM

கள்ளக்குறிச்சி, மார்ச் 22: கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கவுதமசிகாமணி அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் திமுக மாவட்ட கழக செயலாளர் அங்கையற்கண்ணி தலைமையில் இன்று நடக்கிறது. இதுசம்பந்தமாக மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் டாக்டர் கவுதமசிகாமணி அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் இன்று காலை 9 மணியளவில் பகண்டைகூட்ரோடு லட்சுமி திருமண மண்டபத்திலும், காலை 11 மணியளவில் சங்கராபுரம் எஸ்ஏஎஸ் திருமண மண்டபத்திலும், மாலை 3 மணியளவில் கள்ளக்குறிச்சி விஏஎஸ் திருமண மண்டபத்திலும் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தை கட்சி பொதுச் செயலாளர் சிந்தனைசெல்வன், எம்எல்ஏக்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் மத்திய மாவட்ட கழக செயலாளர் பொன்முடி எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். மேலும் கூட்டணி கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். எனவே அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வாரீர் என அறிக்கை மூலமாக அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்