SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேல்பாடி அரிஞ்சிகை ஈஸ்வரன் கோயிலில் சுவாமி சிலை மீது சூரிய ஒளி வீசும் அபூர்வ நிகழ்வு

3/22/2019 12:28:06 AM

சிப்காட், மார்ச் 22: மேல்பாடி அரிஞ்சிகை ஈஸ்வரன் கோயிலில் சுவாமி சிலை மீது சூரிய ஒளி வீசும் அபூர்வ நிகழ்வு நடந்தது. வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா மேல்பாடி பொன்னையாற்றங்கரையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான தபஸ்கிருதம்மாள் சமேத சோமநாதீஸ்வரர் கோயில் உள்ளது. ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோயிலின் எதிரே தென்பகுதியில் 200 அடி தொலைவில் அவரது பாட்டனார் ஆரூர் துஞ்சியதேவனின் கல்லறை உள்ளது. கிமு 1014ம் ஆண்டு நடந்த போரில் வீரமரணமடைந்த ஆரூர் துஞ்சியதேவனுக்காக அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட இந்த கல்லறை மீது அரிஞ்சிகை ஈஸ்வரன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இங்கு கல்லறை மீது விற்றிருக்கும் சுவாமி சிலை மீது சூரிய ஒளி வீசும் அபூர்வ காட்சி நேற்று காலை 6.20 மணி முதல் 6.50 வரை நடைபெற்றது. அப்போது, பொன்நிறத்தில் சிவன் காட்சியளித்தார். இதனை மேல்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள ஏரளமான பொதுமக்கள், பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர், சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. அனைவருக்கும் பிரசதம் வழங்கப்பட்டது.
சுவாமி சிலை மீது சூரிய ஒளி விழும் இந்த அபூர்வ நிகழ்வு மார்ச் 21ம் தேதி(நேற்று முதல் மார்ச் 24ம் தேதி முடிய 4 நாட்கள் (பங்குனி மாதம் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை) காலை 6.20 முதல் 6.50 மணி வரை நடைபெறுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்