SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிருஷ்ணகிரி ெதாகுதியில் தேர்தல் பிரசாரம், கூட்டங்களை வீடியோ பதிவு செய்யவேண்டும்

3/21/2019 3:48:29 AM


கிருஷ்ணகிரி, மார்ச் 21: கிருஷ்ணகிரியில் தேர்தல் குழு தலைவர்களுடனான ஆய்வுக் கூட்டம், தேர்தல் செலவின பார்வையாளர் தலைமையில் நேற்று நடந்தது.  கிருஷ்ணகிரி  கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு  குழு மற்றும் வீடியோ கண்காணிப்பு குழு ஆகிய குழுத் தலைவர்களுக்கான  ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மத்திய தேர்தல் செலவினப்  பார்வையாளர் மற்றும் இணை ஆணையர் (சுங்கம்) அனிஷ் பி.ராஜன் தலைமை வகித்து பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க  ஈடுபடுத்தப்பட்ட குழுக்கள், ஒரே இடத்தில் ஆய்வு  மேற்கொள்ளாமல், சம்பந்தப்பட்ட தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் ஆய்வை மேற்கொள்ள வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக உரிய ஆவணமின்றி  பணம் எடுத்து செல்வதும், மதுபானங்கள் விநியோகிப்பது, பரிசு  பொருட்கள் வழங்குவது குறித்து தகவல் பெறப்பட்டால், இக்குழு சம்பந்தப்பட்ட  இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வீடியோ பதிவு செய்ய வேண்டும். மேலும்,  வாகன சோதனையின் போது பெண்கள் மற்றும் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில்,  சம்பந்தப்பட்ட குழுவினர் உரிய விபரம் தெரிவித்து சோதனை மேற்கொள்ள வேண்டிய  வாகனத்தை சாலை ஓரம் நிறுத்தி ஆய்வு செய்ய வேண்டும்.  கட்சி  தொடர்பான கூட்டங்களில் சுவர் விளம்பரம், பேனர், போஸ்டர்,  துண்டுபிரசுரங்கள், பந்தல், மைக் செட், விளக்குகள், துணி மற்றும் கொடி  வகைகள், வாகனங்கள், நட்சத்திர பேச்சாளர்கள், தலைவர்கள் பேசக்கூடியதை  முழுமையாக வீடியோ பதிவு செய்தும், இதர பொருட்கள் குறித்து கணக்கிட ஏதுவாக  முறையான வீடியோ பதிவு செய்து அதன் முழு விவரத்தை அறிக்கையாக தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.  


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • church_cathdral11

    நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

  • apolo_50vinkalam1

    நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

  • 18-07-2019

    18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்