SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராதாபுரத்தில் காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

3/21/2019 1:11:25 AM

ராதாபுரம், மார்ச் 21:  ராதாபுரம் பகுதியில் காட்சிப்பொருளான குடிநீர் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.  ராதாபுரம் தெற்குத்தெருவில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி உள்ளது. இப்பகுதி பொதுமக்களின் தண்ணீர் தேவை, இத்தொட்டி மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக இந்த குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் இப்பகுதியை சேர்ந்த 500க்கும்  மேற்பட்டோர் தண்ணீர் வசதியின்றி பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் குடிநீருக்காக பல கிமீ அலைந்து திரியும் நிலையும் காணப்படுகிறது. எனவே கோடை காலத்தை கருத்தில் கொண்டு ராதாபுரம் தெற்குத் தெருவில் உள்ள சின்டெக்ஸ் தொட்டியில் தினமும் தண்ணீர் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi1

    ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு

  • dr

    மியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு

  • hongkong

    சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்

  • jappan

    ஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு

  • fire

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்