SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடையநல்லூர் தர்ஹாவில் அமமுக வேட்பாளர் பிரார்த்தனை

3/21/2019 1:11:14 AM

கடையநல்லூர், மார்ச் 21:  கடையநல்லூரில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அமமுக மற்றும் கூட்டணி கட்சி ஒன்றிய, நகர நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தென்காசி நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் பொன்னுத்தாய் அறிமுக கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா தலைமை வகித்தார். அவைத்தலைவர் பொய்கை மாரியப்பன், இணை செயலாளர் சுமதிகண்ணன், துணை செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தனர், நகர செயலாளர் கமாலுதீன் வரவேற்றார். தகவல் தொழில்நுட்ப அணி மீரான், மாவட்ட நிர்வாகிகள் பெருமையாபாண்டியன், கோதர்ஷா, ஒன்றிய செயலாளர் பெரியதுரை, லியாகத்அலி, பண்டாரம், பேரூர் செயலாளர்கள் பரமசிவன், மாரியப்பன், காஜாசெய்யதுஅலி, திருப்பதி, யூனியன் முன்னாள் சேர்மன் பொன்னுச்சாமி, எஸ்டிபிஐ நிர்வாகிகள் சீனாசேனா சர்தார், ஜாபர்அலி உஸ்மானி, யாசர்கான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக வேட்பாளர் பொன்னுத்தாய் மற்றும் நிர்வாகிகள், செய்யது மக்தூம் ஜிஹானி தர்ஹாவில் தீபமேற்றி சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். சங்கரன்கோவிலில் நடந்த அமமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நகர செயலாளர் சங்கர சுப்பிரமணியன், அவைத்தலைவர் செல்வசுப்பிரமணியன், எஸ்டிபிஜ மாவட்ட நிர்வாகி ஜாபர்அலி, அமமுக ஒன்றிய செயலாளர் குருசேவ், நகர மாணவரணி செயலாளர் முப்பிடாதி, ஜெ, பேரவை செயலாளர் சேகர்பாண்டியன், அண்ணா தொழிற்சங்கம்  சண்முகராஜன், பொருளாளர் சாமி, கருப்பசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செந்தில், ராஜ்குமார், நிர்வாகி காளிதாஸ் என்ற கடவுள் பாண்டியன் உள்பட  கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமமுக வேட்பாளர் பொன்னுத்தாயை மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா அறிமுகம் செய்து பேசினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi1

    ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு

  • dr

    மியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு

  • hongkong

    சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்

  • jappan

    ஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு

  • fire

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்