SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவட்டாரில் ₹2.51 லட்சம் பறிமுதல் நள்ளிரவில் பறக்கும்படை அதிரடி

3/21/2019 12:38:10 AM

குலசேகரம், மார்ச் 21:  நாடாளுமன்ற  தேர்தலையொட்டி பண வினியோகத்தை தடுக்க தேர்தல் ஆணையம் சார்பில்  பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. குமரி  மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடந்த வாகன சோதனையில் ₹54.9 லட்சம் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணியளவில்  திருவட்டார் பஸ் நிலைய பகுதியில்,  துணை தாசில்தார் முருகன் தலைமையில்  பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக  வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது காரில் ₹2  லட்சத்து 51 ஆயிரத்து 900 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனை  பறக்கும்படையினர் கைப்பற்றினர். பின்னர் காரை ஓட்டி வந்தவரை விசாரித்தபோது,  அவர் திருவட்டாரை அடுத்துள்ள இட்டகவேலி பகுதியை சேர்ந்த ஜெயஸ்டீபன் என  தெரியவந்தது. இவர் வள்ளியூரில் பைக் ஷோரூம் நடத்தி வருவதாக  கூறப்படுகிறது. பறிமுதல் செய்த பணத்தை பறக்கும் படையினர் தக்கலை  சப் கலெக்டரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்