SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாலப்பணியால் ஆரல்வாய்மொழியில் கடும் நெரிசல் என்ட் டூ என்ட் பஸ்களை நான்கு வழிச்சாலை வழியாக இயக்காதது ஏன்? மாணவர்கள், பயணிகள் கொந்தளிப்பு

3/21/2019 12:37:45 AM

நாகர்கோவில், மார்ச் 21:  ஆரல்வாய்மொழியில் பாலப்பணி நடப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க என்ட் டூ என்ட் பஸ்களை நான்கு வழிச்சாலை வழியாக மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. காவல்கிணறு - பார்வதிபுரம் தேசிய நெடுஞ்சாலையில், ஆரல்வாய்மொழியில் தற்போது பாலப்பணிகள் நடக்கிறது. பல மாதங்களாக மந்த கதியில் இந்த பாலப்பணிகள் நடப்பதால் நாகர்கோவில் - திருநெல்வேலி போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்ட வண்ணம் உள்ளது.
இந்த பாலப்பணியால் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நாகர்கோவில் - திருநெல்வேலி இடையிலான என்ட் டூ என்ட் பஸ்களை ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் வழியாக திருப்பிவிட்டு குமாரபுரம் விலக்கில் இருந்து நான்கு வழிச்சாலையில் செல்லும்படி ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் கடந்த 16ம் தேதியில் இருந்து என்ட் டூ என்ட் பஸ்களையும் ஆரல்வாய்மொழி வழியாக இயக்குகிறார்கள். இதனால் காலை மற்றும் மாலை வேளையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. ஆரல்வாய்மொழியை கடக்க ஒரு மணி நேரத்துக்கு மேல் வாகனங்கள் சிக்கி திணறுகின்றன. நான்கு வழிச்சாலை வழியாக சென்று வந்த என்ட் டூ என்ட் பஸ்கள் திடீரென ஆரல்வாய்மொழி வழியாக திருப்பி விடப்பட்டது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து போக்குவரத்து பணியாளர்கள் கூறுகையில், தேவசகாயம் மவுண்ட் வழியாக செல்லும் போது இடையில் ரயில்வே கேட் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இரு ரயில்கள் வருவதற்காக 20 நிமிடங்கள் வரை என்ட் டூ என்ட் பஸ்கள் காத்திருந்தன. இது பற்றி பயணிகள் சிலர் பொதுமேலாளரிடம் புகார் தெரிவித்து உள்ளனர். இதன் அடிப்படையில் பொதுமேலாளர்  உத்தரவின் பேரில், என்ட் டூ என்ட் பஸ்கள் ஆரல்வாய்மொழி வழியாக மாற்றி விடப்பட்டன. மேலும் என்ட் டூ என்ட் பஸ்கள் செல்வது போல் கனரக வாகனங்கள் மற்றும் பிற பேருந்துகளும் தேவசகாயம் மவுண்ட் வழியாக செல்வதால் அந்த பகுதியில் விபத்து அபாயம் உள்ளது. இதனால் தான் அனைத்து பஸ்களும் ஆரல்வாய்மொழி வழியாகவே ெசல்ல வேண்டும் என உத்தரவு வந்துள்ளது என்றனர். தேவசகாயம் மவுண்ட் பகுதியில் அதிகாரிகளை நிறுத்தி, மற்ற வாகனங்கள் வந்தால் அவற்றை திருப்பி விட்டு, விட்டு என்ட் டூ என்ட் பஸ்களை நான்கு வழிச்சாலை வழியாக  இயக்கினால் அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்களுக்கு வசதியாக இருக்கும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vote

    3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

  • londonprotest

    லண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்