SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிற்றார் 2 அணை பாதுகாப்பு பணி போலீஸ்காரர் சட்டை கிழிப்பு 7 பேர் கைது

3/21/2019 12:36:32 AM

அருமனை, மார்ச் 21: குமரி  மாவட்டம் சிற்றார் 2 அணை பாதுகாப்பு பணியில் நேற்று முன்தினம் ஆயுதப்படையை சேர்ந்த  போலீஸ்காரர்கள் ஜெலின்பிரபு மற்றும் ஆல்வின் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.  இந்தநிலையில் ஆல்வின் சாப்பிட சென்றுள்ளார். இந்த சமயத்தில் ஜெலின்பிரபு  மட்டும் பாதுகாப்பு பணியில் இருந்தார்.  அப்போது நெய்யூர் பகுதியை  சேர்ந்த ஜெபஸ்டின்,  இம்லார்ட், சிபு, சுஜின், சுஜின்கிரேஸ், ஆல்வின்ராஜ்,  சுபின் ஆகியோர் மது அருந்திவிட்டு அணையின் அருகே ரகளையில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த ஜெலின்பிரபு, அவர்களிடம் இங்கு  நிற்க கூடாது, அனைவரும் சென்று விடுங்கள் என்று கூறியுள்ளார்.  இதனால்  ஆத்திரமடைந்த ஜெபஸ்டின் உள்பட 7 பேர் ஜெலின்பிரபுவிடம் வாக்குவாதத்தில்  ஈடுபட்டனர். தொடர்ந்து இவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில்  ஜெலின்பிரபுவின் சட்டை கிழிந்தது. இதுகுறித்து அவர் கடையாலுமூடு போலீசில்  புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து ஜெபஸ்டின் உள்பட 7 பேரையும் கைது செய்து, குழித்துறை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

  • chinaboat

    உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி

  • taiwan

    தைவான் நாட்டில் பேப்பர் மற்றும் மரத்துண்டுகளை கொண்டு வாட்ச், வீடு ஆகியவற்றை உருவாக்கி அசத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்