SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய பாஜ ஆட்சியை அகற்ற திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்

3/20/2019 3:28:44 AM

சேலம், மார்ச் 20: சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் வடக்கு சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று சேலத்தில் நடந்தது. மத்திய மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன் தலைமை வகித்தார். பொருளாளர் சுபாஷ், காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் வேங்கடபதி, விசிக நிர்வாகி ஆறுமுகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகி காதர்உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளரான பார்த்திபனை அறிமுகப்படுத்தி மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ பேசுகையில், ‘‘சேலம் திமுக வேட்பாளர் பார்த்திபனை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். மத்தியில் இருக்கும் மோடி ஆட்சியை அகற்ற மக்கள் தயாராக உள்ளனர். இதனால் அந்த ஆட்சியை தூக்கி எறிவதற்கும், மாநிலத்தில் இருக்கும் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவும் இத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள 40 பேரும் வெற்றி பெறுவார்கள். தேர்தல் பிரசாரத்தில், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையேற்றம் குறித்தும், கடந்த தேர்தலின் போது பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததை பற்றியும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்,’’ என்றார்.

தொடர்ந்து வேட்பாளர் பார்த்திபன் பேசுகையில், ``தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். அவருக்கு சேலத்திலும், தமிழகத்திலும் இடம் இல்லை என்பதை இந்த தேர்தலில் வெற்றி பெற்று நிரூபிக்க வேண்டும்,’’ என்றார். கூட்டத்தில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வக்கீல் கார்த்திகேயன், சூடாமணி, ராஜேந்திரன், துணை செயலாளர் திருநாவுக்கரசு, பகுதி செயலாளர்கள் ராமசந்திரன், சாந்தமூர்த்தி, கேபிள் ராஜா, பிரகாஷ், காங்கிரஸ் நிர்வாகிகள் மேகநாதன், ஆக்ஸ்போர்டு ராமநாதன், சாரதாதேவி, இந்திய கம்யூனிஸ்ட் விமலன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jetairweys_delli11

  வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி, டெல்லி, மும்பையில்ஜெட்ஏர்வேஸ் ஊழியர்கள் போராட்டம்

 • nortkorean_adhibar1

  வடகொரிய அதிபர் ரஷியா பயணம் : வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்கிறார் கிம்ஜாங்

 • 25-04-2019

  25-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • kedarnath

  கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

 • JadeMineMyanmar

  மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்