திருவெறும்பூர் காட்டூரில் அச்சமின்றி மக்கள் வாக்களிக்க போலீசார் கொடி அணிவகுப்பு
3/20/2019 3:14:22 AM
திருவெறும்பூர், மார்ச் 20: திருவெறும்பூர் தொகுதி மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் அச்சமின்றி வாக்களிக்கும் விதத்தில் திருச்சி எஸ்பி ஜியாஉல்ஹக் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
நாடாளுமன்ற தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற இருப்பதையொட்டி வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் விதத்தில் மத்திய காவல் படை போலீசாரும், மாநில போலீசாரும் இணைந்து திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் மஞ்சத்திடல் பாலத்தில் இருந்து பாப்பாக்குறிச்சி சாலை வழியாக மீண்டும் மஞ்சத் திடல் பாலம் வரை திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கொடி துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு நடத்தினர். இந்த கொடி அணிவகுப்பை எஸ்பி ஜியாஉல்ஹக் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட உதவி தேர்தல் பொறுப்பாளரும் மாவட்ட வழங்கல் அதிகாரியுமான கிருஷ்டி, திருவெறும்பூர் ஏஎஸ்பி பிரவீன் உமேஷ் டோங்ரே, தாசில்தார் அண்ணாதுரை மற்றும் போலீசாரும் வருவாய்த்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். பின்னர் எஸ்பி ஜியாஉல்ஹக் கூறியதாவது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் விதமாக இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்படுகிறது இந்த நேரத்தில் தேர்தல் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு காவல்துறை பாதுகாப்பாக உள்ளது என்பதை தெரியப்படுத்தும் விதமாக இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
பூவார் பேரூராட்சியில் பொது மருத்துவ முகாம்
திருச்சி டிடிட்சியாவில் 18ம் தேதி துவக்கம் இலவச ஆயத்த ஆடை உற்பத்தி திறன் மேம்பாட்டு பயிற்சி பெண்கள் பங்கேற்க அழைப்பு
ஜோஸ் ஆலுக்காஸில் வைர திருவிழா
தொட்டியம் அருகே பரபரப்பு
மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திமுக வேட்பாளர் பட்டியல்
உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள்
14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது