SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கும்பகோணத்தில் இன்று நல்லடக்கம் ஜி.கே.வாசனின் சித்தப்பா மறைவு \ முதல்வர் எடப்பாடி, ஓபிஎஸ் நேரில் அஞ்சலி

3/20/2019 3:06:19 AM

சென்னை, மார்ச் 20: ஜி.ஆர்.மூப்பனாரின் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். ஜி.கே.மூப்பனாரின் சகோதரரும், தமாகாவின் செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தவர் ஜி.ஆர்.மூப்பனார்(86). கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிபட்டு வந்த அவர் சென்னையில் உள்ள ஜி.கே.வாசன் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. அவரது உடல், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி.கே.வாசன் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று மாலை 6 மணி வரை வைக்கப்பட்டது. ஜி.கே.வாசன் மற்றும் குடும்பத்தினர், ஜி.ஆர்.மூப்பனாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தமாகா மூத்த துணை தலைவர்கள் ஞானதேசிகன், கத்திப்பாரா ஜனார்த்தனன், ரயில்வே ஞானசேகரன், முனவர் பாட்ஷா, தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், ஆர்.எஸ்.முத்து மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், சைதை மனோகரன், பிஜூ சாக்கோ மற்றும் ஏராளமான கட்சியினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.  
 திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் பிரபு, இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதேபோன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘அவரது மறைவு செய்தி கேட்டு மிகுந்த துக்கதிற்கும் துயரத்திற்கும் உள்ளானேன். திமுக சார்பில் ஜி.கே.வாசன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள் கிறேன் கூறியுள்ளார். ஜி.ஆர்.மூப்பனார் உடல், அவரது சொந்த ஊரான கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் ேகாயிலுக்கு நேற்று மாலை கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு, இன்று மாலை சுந்தர பெருமாள் கோயிலில் உள்ள மூப்பனார் பங்களாவில் அடக்கம் செய்யப்படுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-04-2019

  24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • vote

  3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

 • hailstrom

  தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

 • bookday

  இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

 • ukraine

  உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்