SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆண், பெண்களுக்கு இலவச அழகுக்கலை, செல்போன் பயிற்சி வகுப்பு

3/20/2019 2:56:33 AM

பெரம்பலூர், மார்ச் 20: பெரம்பலூர் சங்குப்பேட்டை ஷெரீப் காம்ப்ளக்சில் ஐஓபி கிராமிய சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இதில் ஆண்களுக்கு சிசிடிவி கேமராவின் பாதுகாப்பு அலாரம் மற்றும் ஸ்மோக் டிடெக்டர் பொருத்துதல் மற்றும் சேவை குறித்தப் பயிற்சி 13 நாட்களும், ஏசி மற்றும் பிரிட்ஜ் பழுது நீக்கல் பயற்சி, கட்டுமானத் தொழில்நுட்பப் பயிற்சி 30 நாட்களும், புகைப்பட பிராமிங், லேமினேசன் அண்டு ஸ்கீரீன் பிரிண்டிங் பயிற்சி 10 நாட்களும், இருசக்கர வாகனம் பழுது நீக்கல் பயிற்சி 30 நாட்களும் நடத்தப்படுகிறது. பெண்களுக்கு எம்பிராய்டரி அண்டு பேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி 30 நாட்களும், ஆடை அணிகலன் தயாரிப்புப் பயிற்சி, பொம்மை தயாரித்தல் பயிற்சி ஆகியன 13 நாட்களும் நடத்தப்படுகிறது.  ஆண், பெண் இருபாலருக்கும் தையற் கலை பயிற்சி, அழகுக்கலை பயிற்சி 30 நாளும், அப்பளம், ஊருகாய் மற்றும் மசாலா தயாரிப்புப் பயிற்சி, அகர்பத்தி தயாரிப்புப் பயிற்சி 10 நாட்களும், செல்போன் பழுது நீக்கல் பயிற்சி 30 நாட்களும், பாஸ்ட் புட் தயாரித்தல் பயிற்சி 10 நாட்களும், மலர்ச்செடி சாகுபடி பயிற்சி, கறவை மாடு வளர்த்தல் பயிற்சி, காய்கறி நாற்றங்கால் மேலாண்மை மற்றும் சாகுபடிப் பயிற்சி, ஆடு வளர்ப்புப் பயிற்சி, காகித அட்டை, உறை மற்றும் பைல் தயாரிப்புப் பயிற்சி ஆகிய 10 நாட்களும், சணல் பை தயாரிப்புப் பயிற்சி 13 நாட்களும் நடத்தப்படுகிறது.

 இந்த இலவச பயிற்சி வகுப்புகள் காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை முழு நேர வகுப்புகளாக நடத்தப்படுகிறது. பயிற்சி முடிந்தவுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் மற்றும் பொருளாதார உதவி பெற ஆலோசனை வழங்கப்படுகிறது. பயிற்சிகளில் சேர்வதற்கு 18 வயதிற்கு மேல் 45 வயதிற்கு உட்பட்டவராக, 8ம் வகுப்புக்கு மேல் படித்தவராக, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக, சுயதொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது பெயர், முகவரி, செல்போன் எண்ணை ஐஓபி ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தில் நேரடியாக வந்து பதிவு செய்து கொள்ளவும். இந்தப் பயிற்சிகளுக்கு பயிற்றுநர்களும் வரவேற்கப்படுகின்றனர். பயிற்றுநர்கள் தொழில் கல்விச் சான்றிதழ் மற்றும் தொழில் பயிற்சி கொடுத்தமைக்கான அனுபவச் சான்றிதழ் அவசியம் பெற்றிருக்க வேண்டும் என பயிற்சி மைய இயக்குநர் அகல்யா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • church_cathdral11

    நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

  • apolo_50vinkalam1

    நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

  • 18-07-2019

    18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்