SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திமுக வேட்பாளர் ஞானதிரவியத்துக்கு உற்சாக வரவேற்பு நெல்லையில் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

3/20/2019 12:29:57 AM

நெல்லை, மார்ச் 20: நெல்லை  தொகுதி திமுக வேட்பாளர் ஞானதிரவியத்திற்கு நெல்லையில் திமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். நெல்லை சந்திப்பு அண்ணா சிலை உள்ளிட்ட  தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நெல்லை  நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக கிழக்கு மாவட்ட திமுக பொருளாளரும்,  வள்ளியூர் ஒன்றிய திமுக செயலாளருமான ஞானதிரவியம் போட்டியிடுகிறார். சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து  பெற்ற ஞானதிரவியம், நேற்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.பின்னர் நெல்லை  சந்திப்பு அண்ணா சிலை வந்த அவருக்கு மாவட்ட திமுக செயலாளர்கள் கிழக்கு ஆவுடையப்பன், மத்திய மாவட்டம் அப்துல்வஹாப் ஆகியோர் தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  தொடர்ந்து நெல்லை சந்திப்பு காமராஜர் சிலை, அம்பேத்கர் சிலை, வஉசி சிலை, தேவர் சிலை,  அழகுமுத்துகோன் சிலை, இந்திராகாந்தி சிலை,  ஒண்டிவீரன் சிலை, பாளை பெரியார் சிலை உள்ளிட்ட தலைவர்களின் சிலைக்கு  ஞானதிரவியம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில்  எம்எல்ஏக்கள் மைதீன்கான், ஏ.எல்.எஸ்.ெலட்சுமணன், முன்னாள் எம்எல்ஏ அப்பாவு, மத்திய மாவட்ட அவைத் தலைவர்  சுப சீதாராமன், தலைமை செயற்குழு உறுப்பினர்  பிரபாகரன், மாநில நெசவாளர் அணி அமைப்பாளர் பெருமாள், முன்னாள் மேயர்  உமாமகேஸ்வரி, தீர்மானக்குழு உறுப்பினர் ப.ஆ.சரவணன், ஒன்றிய செயலாளர்கள் ராதாபுரம்  விஎஸ்ஆர் ஜெகதீஷ், பாளை தங்கபாண்டியன், களக்காடு பி.சி.ராஜன், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் தாழை கே.ஆர்.ராஜூ, மாவட்ட துணை செயலாளர்கள் மத்தி ஆ.க.மணி, கிழக்கு சித்திக், வக்கீல் அணி அமைப்பாளர் தினேஷ், கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செல்லத்துரை, மகளிரணி அமைப்பாளர் செல்வி  சங்குகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய  எட்வின், வக்கீல் அணி துணை அமைப்பாளர் செல்வசூடாமணி, நெல்லை மாநகர பகுதி செயலாளர்கள்  தச்சை சுப்பிரமணியன், நெல்லை டவுன் நமச்சிவாயம், பாளை பூக்கடை அண்ணாத்துரை, முன்னாள் கவுன்சிலர் எஸ்.வி.சுரேஷ், வல்லநாடு முத்து,  வக்கீல்கள் தவசிராஜன், மானூர் கானா என்ற கருப்பசாமி, சுப்பிரமணியன்,  கலைச்செல்வன், கந்தசாமி, அறிவழகன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநகர  துணைச் செயலாளர் மேகை செல்வம், ஆதி திராவிடர் நலக்குழு அமைப்பாளர்  வருஷபத்து ரவி, தகவல் தொழில்நுட்ப அணி பாளை தொகுதி ஒருங்கிணைப்பாளர் பலராமன்,  மாவட்ட  மருத்துவர் அணி டாக்டர் சங்கர், மாநகர துணைச் செயலாளர் வள்ளியம்மாள், முன்னாள் பகுதி செயலாளர் உலகநாதன், மாநகர பிரதிநிதி காசிமணி, மாவட்ட  பிரதிநிதி சண்முகசுந்தரம், மாஞ்சோலை மைக்கேல், பழனியப்பன், பேரங்காடி ஐயப்பன், முன்னாள் கவுன்சிலர்கள் கந்தன், மூர்த்தி உட்பட  திமுகவினர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • church_cathdral11

  நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

 • apolo_50vinkalam1

  நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

 • 18-07-2019

  18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • intelexopchina17

  சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்