SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிட்டுக்குருவிகளின் நண்பர்களான நாகர்கோவில் வியாபாரிகள்

3/20/2019 12:08:16 AM

நாகர்கோவில், மார்ச் 20:  உலகில் பல நாடுகளில் உலக சிட்டுக்குருவி தினம் மார்ச் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. அழிந்து வரும் சிட்டுக் குருவியைப் பாதுகாக்கவும், நகர்ப்புறங்களில்வாழ்கின்ற பிற பறவைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்நாள்கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவியைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு கட்டுரைப் போட்டி,கவிதைப் போட்டி, வர்ணம் தீட்டும் போட்டி என பல போட்டிகளை மாணவர்கள், பொது மக்களிடம் நடத்துகின்றார்கள். சிட்டுக் குருவி எப்பொழுதும் மனித இனத்துடன் ஒன்றித்து வாழ்கின்ற பறவையாகும். சில இடங்களில் இதை ‘அடைக்கலாங்கு ருவி’ என அழைக்கின்றனர். மனிதர்களிடம் அடைக்கலம் தேடி வருகின்ற ஒரு அற்புதமான பறவை. நெருக்கமாக இருக்கின்ற மண்டிகள், சந்தைகள், கடைகள் ஆகிய இடங்களில் மனிதனுடன் ஒன்றிணைந்து வாழ்கின்ற பறவை.மனிதனுக்கு நன்மை செய்யும் சிட்டுக்குருவியைப் பாதுகாப்பது மிகத் தேவையாகும்.இக்குருவியைப் பாதுகாக்கும் நோக்கத்தில் நாகர்கோவில் அப்டா சந்தையில் வியாபாரிகள் கூடுகளை அமைத்து சிட்டுக்குருவிகள் இனப்பெருக்கத்திற்கு பெரிதும் உதவுகின்றனர். 500க்கும் மேற்பட்ட குருவிகள் சந்தையில் உள்ளது. சிட்டுக்குருவிகள் குமரி மாவட்டத்தின் கிராமப்பகுதிகளிலும் நகர்புறங்களிலும் சிறிய எண்ணிக்கையில்காணப்படுகிறது. இவற்றின் எண்ணிக்கையை பெருக்கும் முயற்சியாக உலக சிட்டுக்குருவிதினத்தில் கூடுகள் வழங்கப்படுகிறது.பொதுவாக பறவைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதுபோல சிட்டுக்குருவியின்எண்ணிக்கையும் குறைந்து இப்பறவையினம் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக சூழியல் ஆர்வலர் டேவிட்சன் கூறியதாவது: பல ஆண்டுகளுக்கு முன்பு வீடுகள் ஓடுகளால் கூரை அமைக்கப்பட்டபோது வீட்டுக் கூரைப்பகுதிகளில் உள்ள சந்து பொந்துகளில் சிட்டுக்குருவி கூடுகள் அமைத்து வாழ்ந்தன. தற்போதையகான்கிரிட் கட்டிடக்கலையில் இக்குருவி வாழ்வதற்கு இடம் இல்லாமல் போய்விட்டது. வயல் நிலங்கள், தானியங்கள், காய் கனி பயிர்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள்தெளிப்பதால் அவற்றால் சாகடிக்கப்பட்ட புழுக்கள், பூச்சிகளை உண்பதும் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தாங்கிய தானியங்களை உண்பதாலும் சிட்டுக்குருவிகள் பெருமளவில் மரணத்தை தழுவுகின்றன.பெருகி வருகின்ற வாகனங்களில் இருந்து வெளிப்படும் நச்சுப்புகையால் பறவைகள்பெரிய அளவில் பாதிக்கப்படுவதால் அப்புகை சிட்டுக்குருவியின் அழிவுக்குவித்திடுகின்றன. பறவைகளுக்கு உணவு, கூடு கட்ட வாழிடங்கள் மற்றும் போதிய பாதுகாப்பு தேவை. இவை அனைத்தும் இணைந்து ஓரிடத்தில் கிடைத்தால் மட்டுமே பறவைகள் வாழ முடியும். இன்றைய நவீன காலத்தில் சிட்டுக் குருவிகளுக்கு இவை அனைத்தும் கிடைப்பது கடினமாக உள்ளதால் அதன் இனம் அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளது. மனித உடலை சிறப்பாக வைத்திருக்க சிட்டுக் குருவியின் மாமிசத்தை உண்பது நல்லது என்றதவறான சிந்தனையால் சிட்டுக்குருவி லேகியம் தயாரிக்கப்பட்டு விற்பனை ஆகிறது.இதனால் பல நூற்றுக்கணக்கான சிட்டுக்குருவிகள் ஒரே நாளில் கொல்லப்படுவதால் அச்செயல் இன அழிவுக்கு காரணமாகிறது.புறவைகள் மனித இனத்தின் நண்பர்கள். விவசாய நிலங்களில் பயிர்களைஅழிக்கின்ற புழு பூச்சி வண்டு போன்ற எதிரிகளை பறவைகள் உண்பதால் விவசாயிகளின்நண்பனாக திகழ்கின்றன. புழு, பூச்சிகளை தின்பதால் பூச்சி கொல்லி மருந்துகள்தெளிக்க தேவையில்லை அல்லது குறைந்த அளவில் தெளித்தால் போதுமானதாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • church_cathdral11

  நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

 • apolo_50vinkalam1

  நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

 • 18-07-2019

  18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • intelexopchina17

  சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்