சொத்து குவிப்பு வழக்கில் அரசு அதிகாரிகளுக்கு 2 ஆண்டு சிறை: சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
3/19/2019 12:33:05 AM
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அரசு அதிகாரிகளான கணவன், மனைவி இருவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர்கள் அறிவுடை நம்பி. இவரது மனைவி சத்தியவாணி. அறிவுடைநம்பி சென்னை டி.எம்.எஸ்சில் துணை மருத்து கட்டுப்பாட்டு அதிகாரியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி தலைமை செயலகத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், தம்பதி இருவரும் பணியில் இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அதன்படி சிபிஐ அதிகாரிகள் கடந்த 2007ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், வருமானத்துக்கு அதிகமாக 90 சதவீத சொத்து சேர்த்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள 9வது சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்து நேற்று நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு வழங்கினார். அதில், இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தது. எனவே அறிவுடை நம்பிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் ₹2 லட்சம் அபராதமும், சத்தியவாணிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் ₹1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள்
பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் நடைபாதையில் கட்டிய கோயில் அகற்றம்: நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை
அரசு அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து பெண் கோட்டாட்சியருக்கு மிரட்டல் அதிமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு: கிண்டியில் பரபரப்பு
குழந்தை பிறக்க சிகிச்சை அளிப்பதாக கூறி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சித்த மருத்துவர் கைது: போலீசார் விசாரணை
மாநகராட்சி பணிகளில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய குழு: புகாரை தொடர்ந்து ஆணையர் அதிரடி
பாலியல் தொல்லை ஆசாமிக்கு தர்மஅடி
துணிக்கடையில் 9 லட்சம் கொள்ளை
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது
13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்