SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிளக்ஸ் ேபார்டுகள் வைக்க 15 நாட்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும்

2/22/2019 6:29:45 AM

மஞ்சூர், பிப்.22: பிளக்ஸ் ேபார்டுகள், விளம்பர போர்டுகள் வைக்க 15 நாட்களுக்கு முன் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும் என அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா பேரூராட்சி அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று மாைல நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜ் தலைமை தாங்கினார். இதில் திமுக சார்பில் தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துைண அமைப்பாளர் ராஜூ, சின்னான், அமுமுக சார்பில் மணியரசன், தம்பிநூரான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் ஆரி, ஏஐடியூசி., கட்டிடத்தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார், மஞ்சூர் அனைத்து கடைக்காரர் சங்க நிர்வாகிகள் சஜி, பாரூக், சுரேஷ்குமார்சேட் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் கலந்து கொண்டார்கள். இதில் சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி கீழ்குந்தா பேரூராட்சிகுட்பட்ட பகுதிகளில் பொது இடங்கள், பொது கட்டிடங்கள், சுவர்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்கள், பிளக்ஸ் ேபார்டுகள், சுவர்களில் எழுதப்படும் வாசகங்கள் ஆகியவற்றை அகற்ற வேண்டும். பேரூராட்சிகளின் இயக்குனர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்படி பேரூராட்சிகுட்பட்ட பகுதிகளில் போர்டுகள், விளம்பர பிளக்ஸ் ேபார்டுகள் வைக்க 15 நாட்களுக்கு முன் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.

உரிய அனுமதி பெறாமல் பிளக்ஸ் ேபார்டுகள் மற்றும் விளம்பர பேனர்கள் வைத்தால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலர் நடராஜ் தெரிவித்தார். மேலும் இது தொடர்பான அரசியல் கட்சியினரின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. பந்தலூர்: நெல்லியாளம் நகராட்சியில் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளிடம் பேனர்கள் வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. பேனர்கள் வைப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம தீர்ப்பின் படி, தனியார் இடமாக இருந்தால் நில உரிமையாளரிடமும், அரசு இடமாக இருந்தால் காவல் துறையிடமிருந்தும் தடையின்மை சான்று பெறவேண்டும். மேலும் 100 அடிக்குமேல் 15 அடி உயரம் 24அடி அகலமும். 60 அடி முதல் 100 அடி வரை 12 அடி உயரமும் 20 அடி அகலமும், 50 அடி முதல் 60 அடி வரை 10 அடி உயரமும் 16 அடி அகலமும், 20 அடி முதல் 40 அடிவரை 8அடி உயரமும் 5 அடி அகலமும், 10 அடி முதல் 20 அடி வரை 3 அடி உயரமும் 2.5 அடி அகலமும், ரோட்டின் மைய பகுதியில் 4 அடி உயரமும் 2.5 அடி அகலமும்  இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இடையூறாகவும், அனுமதி பெறாமல் பேனர் வைப்பவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. விதிமுறை மீறுபவர்கள் மீது 50 ஆயிரம் அபராதமும் ஒரு வருட சிறை தண்டனையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், சாலையோரங்களில் பேனர் வைப்பதற்கும், பாதசாரிகளுக்கு இடையூறாக பேனர் வைப்பது உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு ஆணையாளர் (பொறுப்பு) சத்திவேல் தலைமை வகித்தார், திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி, விசிக, தமாக, பிஜேபி, தேமுதிக உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூடலூர்: கூடலூரை அடுத்த ஓவேலி பேரூராட்சி அலுவலகத்தில், பேனர்கள் வைப்பது குறித்தான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.  செயல் அலுவலர் வேணுகோபால் தலைமை வகித்தார்.  இதேபோல் கூடலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்  நகராட்சி ஆணையர் நாராயணன்  தலைமை வகித்தார். கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய ஆணையர் நந்தகுமார்  தலைமை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் மற்றும் பொதுநல அமைப்புகள்,சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுபடி, சட்ட விதிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • intelexopchina17

  சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்