SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊட்டி பூங்காவில் பச்சை ரோஜா சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பு

2/22/2019 6:29:24 AM

ஊட்டி,  பிப். 22: ஊட்டி ரோஜா பூங்காவில், கோடை சீசனுக்காக மேல் பாத்திகள்  முழுவதும் கவாத்து செய்யப்பட்ட நிலையில் புதியதாக பூத்துள்ள பச்சை நிற ரோஜா சுற்றுலா பயணிகளை  வெகுவாக கவர்ந்துள்ளது.
 ஊட்டி ரோஜா பூங்காவில் 4 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட ரோஜா வகைகள் உள்ளன. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா செடிகள்  உள்ளன. ஆண்டு தோறும் கோடை சீசன் போது இங்கு ரோஜா கண்காட்சி நடத்தப்படும்.  அதற்காக ஜனவரி மாதம் முதல் பூங்காவை தயார் செய்யும் பணி  மேற்கொள்ளப்பட்டும்.  மே மாதம் ஊட்டி ரோஜா பூங்காவில் நடக்கவுள்ள ரோஜா  கண்காட்சிக்காக தற்போது ரோஜா பூங்கா தயார் செய்யும் பணிகள் நடக்கிறது.
இதற்காக  ரோஜா பூங்காவில் தற்போது கவாத்து செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது.

நுழைவு வாயில் அருகில் உள்ள மேல் பாத்தியில் (முதல் பாத்தி)  அனைத்து செடிகளும் கவாத்து செய்யப்பட்டுள்ளன. அதேசமயம், இண்டாவது பாத்திகளில் சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் சில செடிகளில் மலர்கள் வைக்கப்பட்டுள்ளது. அங்கு  இனியும் கவாத்து பணிகள் துவக்கப்படவில்லை. அதேசமயம், பூங்காவின் நுழைவு  வாயில் பகுதியில் பச்சை நிற ரோஜா மற்றும் ஜெயலலிதா ரோஜா செடிகளில் உள்ள  மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. குறிப்பாக, நுழைவு வாயில்  பகுதியில் உள்ள பச்சை நிற ரோஜா வித்தியாசமாக உள்ளதால், அதனை சுற்றுலா  பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்