SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பந்தலூர் அருகே மரம் விழுந்து வீடு சேதம்

2/22/2019 6:29:06 AM

பந்தலூர், பிப்.22: பந்தலூர் அருகே  கூவமூலா கிராமத்தில் வீட்டின் மீது மரம் விழுந்து வீடு சேதம் அடைந்துள்ளது. பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக  மிதமான காற்று வீசி வருகிறது. இந்நிலையில் கூவமூலா கிராமத்தில் தனியார் தேயிலைத்தோட்டம் அருகே குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் உள்ள ஆபத்தான நிலையில் இருந்த மரம் ஒன்று நேற்று அப்பகுதியில் குடியிருந்து வரும் கூலித்தொழிலாளி புஷ்பராஜ் என்பவர் வீட்டின் மீது விழுந்து வீடு முற்றிலும் சேதம் அடைந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

ஏற்கனவே இப்பகுதியில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறை மற்றும் வருவாய் துறையினருக்கு கோரிக்கை விடுத்து எந்தவித நடவடிக்கையும் இல்லை. பாதிக்கப்பட்ட வீட்டை பந்தலூர் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் வனத்துறையினர் சென்று ஆய்வு செய்தனர். மரம் விழுந்து சேதமான வீட்டிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

  • holifestivel

    வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்