SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தல் கண்காணிப்பு பணிக்காக 90 பறக்கும் படை அமைக்க உத்தரவு

2/22/2019 6:27:28 AM

கோவை, பிப்.22:ேகாவை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக  வீடியோ கண்காணிப்பு குழு, பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 கோவை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகள் துவக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஊழியர்கள் தேர்வு, தேர்தல் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழு உருவாக்க மத்திய தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதன்படி கோவை மாவட்டத்தில் வீடியோ கண்காணிப்பு படை (வி.எஸ்.டி) பறக்கும் படை (எப்.ஜி), நிலையான கண்காணிப்பு படை ( எஸ்.எஸ்.டி) உருவாக்கும் பணி நடக்கிறது. 90 பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு படை, ஓட்டு சாவடிகளுக்கான கண்காணிப்பு படை உருவாக்கவேண்டும். 12 மணி நேரம் மற்றும் 24 மணி நேர கண்காணிப்பு படை செயல்படும் வகையில் செயல் திட்டம் தயாரிக்கவேண்டும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
 இந்த வீடியோ படை வரும் 25ம் தேதி ஒப்பந்த அடிப்படையில் இறுதி செய்யப்படவுள்ளது. இந்த கண்காணிப்பு படைக்காக 10 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிகள் அமலாக்கப்படும் போது உடனடியாக இந்த வீடியோ கண்காணிப்பு குழு பணியில் ஈடுபடுத்தப்படும். மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் கண்காணிப்பாளர், பறக்கும் படை அலுவலர்கள் தலைமையில் இந்த குழு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு படையில் உள்ள வீடியோகிராபர்கள் காட்சிகளை முழுமையாக வீடியோ கேமராவில் மட்டுமே பதிவு செய்யவேண்டும்.காட்சிகளை கட்டுபாட்டு அறையில் மட்டும் பதிவிறக்கம் செய்யவேண்டும். பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படை, வீடிேயா கண்காணிப்பு படையில் உள்ள தேர்தல் அலுவலர்கள் கட்டுபாட்டில் வீடியோகிராபர்கள் பணியாற்றவேண்டும். காட்சி பதிவுகளை தேர்தல் கமிஷன் பார்வைக்கு தினமும் அனுப்பி வைக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறை மீறல்களை செல்போனில் பதிவு செய்யக்கூடாது.
தேர்தல் பிரிவு தவிர வேறு நபர்களுக்கு காட்சி பதிவுகளை அனுப்ப கூடாது. இதை மீறும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் மீது நடத்தை விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வீடியோ கண்காணிப்பு குழுவில் உள்ள வீடியோகிராபர்கள் மீது தேர்தல் கமிஷன் சட்ட விதிமுறைகளின் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-05-2019

    20-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-05-2019

    19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-05-2019

    18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • TaiwanSameSexMarriage

    ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

  • frenchpainterclaude

    பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்