SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வனவிலங்குகள் தாகம் தணிக்க கசிவுநீர் குட்டைகளில் நீர் நிரப்பும் பணி தீவிரம்

2/22/2019 6:27:16 AM

மேட்டுப்பாளையம்,பிப்.22: கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிறுமுகை,மேட்டுப்பாளையம்,காரமடை பகுதிகள் புதர்காடுகள் நிறைந்தவை. இங்கு யானை,காட்டெருமை, மான்,சிறுத்தை,புலி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
 தற்போது கோடை துவங்கி விட்டதால் வனப்பகுதிகளில் இயற்கையாக இருந்த நீரோடை, ஊற்று,குட்டை போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் வற்றி விட்டன. இதை தொடர்ந்து வனவிலங்குகள் தாகம் தணிப்பதற்காக  குடிநீர் தேடி மலைகிராமங்களுக்கும், விளைநிலங்களுக்கும் ஊடுறுவ வாய்ப்புள்ளதால், வனத்துறையினர் வனப்பகுதிக்குள்ளாகவே செயற்கை நீர்நிலைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
 சிறுமுகை வனப்பகுதியில் 2 கசிவு நீர் குட்டை, 4 தண்ணீர் தொட்டிகள் மற்றும் போர்வெல் மூலம் தண்ணீர் நிரப்பப்படக் கூடிய ஒரு தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
 பவானிசாகர்அணையின் நீர்பிடிப்பு பகுதியானது சிறுமுகை வனத்தில் 20 கி.மீ தொலைவிற்கு பரந்து கிடப்பதால் அங்கு இயற்கையாகவே பல இடங்களில் கசிவுநீர் குட்டைகள் அமைந்துள்ளது.
மேட்டுப்பாளையம் பகுதியில் ஓடந்துறை முதல் நெல்லித்துறை  வரை வனத்தில் செயற்கை முறையில் கசிவுநீர் குட்டைகள் ஏற்படுத்தப்பட்டு அவற்றில் தண்ணீர் நிரப்பும் பணி நடந்து வருகிறது. காரமடை வனத்திலும் வனவிலங்குகள் தாகம் தணிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட குட்டை மற்றும் தொட்டிகளை இயற்கையாக தண்ணீர் கிடைக்கின்ற இடத்தில் இருந்து குழாய்கள் மூலமாக நிரப்புவதோடு, சில இடங்களில் போர்வெல் தண்ணீரை குழாய்கள் மூலம் எடுத்து சென்று நிரப்பும் பணியும் தொடர்கிறது.
இதுகுறித்து சிறுமுகை ரேஞ்சர் மனோகரன் கூறுகையில், கோடையை முன்னிட்டு வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுவதை தடுக்கின்ற வகையில் வனத்துறை சார்பில் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடந்து வரும் வேளையில், காட்டு தீ ஏற்படாமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக காட்டு தீயை கட்டுப்படுத்தவும், மேலும் பரவாமல் தடுக்கவும் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. காட்டுதீ குறித்த தகவல் அறிந்தால் உடனடியாக சம்மந்தப்பட்ட பகுதிக்கு செல்வதற்காக வனத்துறையினர் குழுக்களாக பிரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். மேலும் வேட்டை தடுப்பு காவலர்கள் மூலம் உணவு, தண்ணீர் ேதடி மலைகிராமங்களுக்குள் வனவிலங்குகள் ஊடுறுவாமல் இருப்பதற்காக கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-05-2019

    20-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-05-2019

    19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-05-2019

    18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • TaiwanSameSexMarriage

    ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

  • frenchpainterclaude

    பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்