SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்திய கம்யூ. மாநாட்டில் பங்கேற்க

2/22/2019 6:26:33 AM

பிப்.27ல் மு.க.ஸ்டாலின் கோவை வருகை
கோவை, பிப். 22: மு.க.ஸ்டாலின் வரும் 27ம்தேதி கோவை வருகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில குழு சார்பில் அரசியல் எழுச்சி மாநாடு கோவை பீளமேடு கொடிசியா மைதானத்தில் வரும் 17ம்தேதி (புதன்) மாலை 3 மணிக்கு நடக்கிறது. இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் சுப்பராயன் தலைமை தாங்குகிறார். மூத்த நிர்வாகிகள் நல்லகண்ணு, தா.பாண்டியன், சி.மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாநில செயலாளர் முத்தரசன் வரவேற்கிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, இம்மாநாட்டை துவக்கி வைக்கிறார். இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, நிறைவுரை ஆற்றுகிறார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, மாநில பொருளாளர் ஆறுமுகம், கோவை மாவட்ட செயலாளர் சுந்தரம் உள்பட பலரும் பேசுகின்றனர். முடிவில், மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் நன்றி கூறுகிறார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

  • StalinElectionCampaign19

    தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்