SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீடாமங்கலத்தில் தமமுக ஆர்ப்பாட்டம்

2/22/2019 5:03:51 AM

நீடாமங்கலம்,பிப்.22: நீடாமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு தாசில்தார், பொதுப்பணித்துறையை கண்டித்து தமமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்தி ற்கு திருவாரூர் தெற்கு மாவட்டச் செயலாளர் ரஜினிபாண்டியன்,வடக்கு மாவட்ட தவைவர் ஆரோக்கிய செல்வம் தலைமை வகித்தனர்.நீடாமங்கலம் ஒன்றிய தலைவர்(பொ)சரவணபாண்டியன்,தெற்கு மாவட்ட தலைவர் ரஞ்சித்குமார் முன்னிலை வகித்தனர். நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் ரஜினிபாண்டியன் வரவேற்றார்.சிறப்புஅழைப்பாளர்களாக  மாநிலதுணை பொதுச்செயலாளர் இமான்சேகர்,மாநில வழக்கறிஞர் பிரிவுசெயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர்  பேசினர். இதில் திரளான  நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பூவனூர் ஊராட்சிக்குட்பட்ட பேருந்து நிறுத்தம் எதிரில் கோடைகால வெயிலை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த நீர்மோர் பந்தலை அப்புறப்படுத்திய தாசில்தார்,மன்னார்குடி பொதுப்பணித்துறை பொறியாளர், வருவாய் ஆய்வாளர்,பூவனூர் கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன . முடிவில் விஜயகாந்த் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: குப்பைகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள்

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

  • flyingtaxi

    ஜெர்மனியில் 5 இருக்கைகள் கொண்ட பறக்கும் டாக்ஸி அறிமுகம்: சோதனை ஓட்டம் வெற்றி

  • 20-05-2019

    20-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்