SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆலங்குடி அருகே அரசு பள்ளி ெஹச்எம்மை கண்டித்து மாணவர்கள், பெற்றோர் போராட்டம்

2/22/2019 5:00:39 AM

ஆலங்குடி, பிப்.22: ஆலங்குடி அருகேயுள்ள பனங்குளம் கிழக்கு அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை கண்டித்து மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுக்கோட்டை மாவட்டம், பனங்குளம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 19ம் தேதி தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. வாரத்தில் ஒரு நாள் பள்ளிகளில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மாலையில் இறக்கும் தொடர் நிகழ்வில், கடந்த 19ம் தேதி ஏற்றப்பட்ட தேசியக்கொடியை பள்ளியின் ஆசிரியர் இறக்காமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், தேசியக்கொடி இரவு முழுவதும் பறந்து கொண்டிருந்தது. இதனைக்கண்ட அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அளித்த தகவலை தொடர்ந்து, தேசியக்கொடி இறக்கப்பட்டது. இதுகுறித்த செய்தி நாளிதழ்களில் வந்தது.  இந்நிலையில், நேற்று காலை பள்ளிக்கு சென்ற  தலைமை ஆசிரியை ஜோதி, அப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் பணி செய்து வந்த ஆசிரியையை பணிக்கு வரவேண்டாமெனக்கூறி அனுப்பிவிட்டார். தகவலறிந்து பள்ளிக்கு சென்று பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பெற்றோர்கள் கேட்டபோது, தேசியக்கொடி இரவிலும் பறந்த தகவலை நாளிதழ்களுக்கு தெரிவித்தது யார் எனக்கேட்டு தலைமை ஆசிரியை ஜோதி, அவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் தலைமை ஆசிரியை ஜோதியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற திருவரங்குளம் வட்டார கல்வி அலுவலர் நடராஜன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பெற்றோர்கள் பள்ளியில் கல்வித்தரம், சேர்க்கை விகிதம் குறைந்துவிட்டது என புகார் தெரிவித்தனர். தொடர்ந்து, வட்டார கல்வி அலுவலர் நடராஜன், விரைவில் பள்ளிக்கு உதவி ஆசிரியர் நியமிக்கப்படுவார். அதுவரை பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் இருந்து பணியாற்றிய ஆசிரியை தொடர்ந்து பாடம் நடத்துவார் என உறுதியளித்தார்.  இதனைத்தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டத்தை கைவிட்டனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஜோதி, கறம்பக்குடி தாலுகா, வாழக்கொல்லை தொடக்கப்பள்ளியில் பணியாற்றிய போது, இக்கல்வியாண்டின் தொடக்கத்தில் அப்பள்ளியில் ஒரு மாணவர் கூட சேராததால், தலைமை ஆசிரியை ஜோதிக்கு கட்டாய இடமாறுதல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்