SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுகையில் புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து மக்கள் சாலை மறியல்

2/22/2019 5:00:23 AM

புதுக்கோட்டை, பிப்.22: புதுகையில் புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து காந்தி நகர் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த நவம்பர் 16ம் தேதி கஜா புயல் தாக்கியது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள், மரங்கள் போன்றவை சாய்ந்தன. இதேபோல குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் போன்றவையும் சேதமடைந்தன. இதைத்தொடர்ந்து தற்போது புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் புயல் நிவாரண பொருட்களும், தென்னை மரங்கள், பயிர்கள், வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் நிவாரண தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் புதுக்கோட்டை காந்தி நகர் 7ம் வீதியில் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளை கணக்கெடுத்து சென்ற அதிகாரிகள், நிவாரண தொகை வழங்கப்படும் என கூறி சென்றனர். ஆனால், இதுநாள் வரை காந்திநகர் 7ம் வீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புயல் நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண தொகை வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதனை கண்டித்து புதுக்கோட்டை-ஆலங்குடி சாலையில் காந்தி நகர் பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த  கணேஷ்நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் புதுக்கோட்டை-ஆலங்குடி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்