SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுகை சாந்தநாத சுவாமி கோயிலில் மாசிமக தெப்ப உற்சவம்

2/22/2019 5:00:16 AM

புதுக்கோட்டை, பிப்.22: புதுக்கோட்டையில் சாந்தநாத சுவாமி கோயிலில் மாசிமகத்தை முன்னிட்டு தெப்ப உற்சவம் நடந்தது.  புதுக்கோட்டையில்  வேதநாயகி அம்மன் உடனுறை சாந்தநாத சுவாமி கோயிலில்  மாசி மகத்தை முன்னிட்டு  11ம் ஆண்டு தெப்பத் திருவிழா நடந்தது. மாவட்ட தங்கம், வெள்ளி மற்றும் வைரம் நகை வியாபாரிகள்  சங்கம் சார்பில் நடந்த இந்த விழாவில் வேதநாயகி அம்மன் மற்றும் சாந்தநாத  சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இரவு பல்லவன் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வேதநாயகி அம்மன்  உடனுறை சாந்தநாத சுவாமி வலம் வந்தார். பல்லவன் குளத்தை சுற்றி நான்கு  கரைகளிலும் அகல் விளக்குகள் ஏற்றி மக்கள் வழிப்பட்டனர். விழாவில்  வயி.சண்முகம்பிள்ளை ஜூவல்லர்ஸ் உரிமையாளரும், நகை வியாபாரிகள் சங்க  தலைவருமான வயி.ச.வெங்கடாசலம், முன்னாள் தக்காரும், எஸ்விஎஸ் குழும தலைவர்  வெங்கடாசலம், லேணா சரவணன் மற்றும் சுந்தர் உட்பட ஏராளமான பக்தர்கள்  கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்