SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிஜிட்டல் பேனர் அமைப்பது தொடர்பான கூட்டம் சட்டத்திற்கு புறம்பாக விளம்பர பதாகைகள் வைத்தால் நடவடிக்கைஅதிகாரி எச்சரிக்கை

2/22/2019 4:57:25 AM

அரியலூர்,பிப்.22: சட்டத்திற்கு புறம்பாக விளம்பர பதாகைகள் வைத்தால்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவின் பேரில், சாலை ஓரங்களில் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பர தட்டிகள் அமைப்பது தொடர்பான விதிமுறைகள் குறித்து அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் விளக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். திருமானூர்  இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் செந்தில்குமார் பேசுகையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத அரசியல் கட்சிகள் சாலையின் இரு புறங்களிலும் டிஜிட்டல் பேனர்கள், விளம்பர தட்டிகள், சுவரொட்டி விளம்பரங்கள் நிறுவப்படாத என்றும், மேலும், தமிழகம் முழுவதும் உள்ள நடைமேடைகள், பாதசாரிகள் நடக்கும் நடைபாதைகள், மற்றும் முக்கிய சாலைகளில் விளம்பரம் தட்டிகள் வைக்க கூடாது எனவும்,மேலும் அதையும் மீறி விளம்பர பதாகைகள் வைத்தால் சாலையை உபயோகப்படுத்தும் பொது மக்களுக்கு கவனம் சிதறப்பட கூடும்.

மேலும் விளம்பர தட்டிகள் பள்ளி, கோயில், மருத்துவமனை, இருக்கும் இடத்திலிருந்து 100 மீட்டர் தூரம் வரை நிறுவப்பட கூடாது என்றும், மற்றும் நிலைகளுக்கு அருகிலோ, சுற்றுலா தலங்கள் அருகில் பதாகைகள் வைக்கக் கூடாது என்றும், சட்டத்திற்கு புறம்பாக விளம்பர பதாகைகள் வைத்தால் பொதுமக்கள் 1913 என்ற எண்ணில் புகார் தெரிவித்தால், கலெக்டர்  மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும். மேலும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை யாராவது மீறுவதாக தெரிந்தால் அவர்கள் மீது ஒரு வருடம் சிறைதண்டனை அல்லது 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், அல்லது இரண்டும் அனுபவிக்க நேரிடும்.  மேலும் டிஜிட்டல் பதாகைகள் , விளம்பர தட்டிகள் விளம்பரத்திற்காக வைக்கப்பட்டால் ஆறு நாட்களுக்கு மேல் இருக்க கூடாது, அப்படியிருந்தால் உடனடியாக அப்புறப்படுத்த நேரிடும். மேலும் அனுமதி பெற்ற டிஜிட்டல் பதாகைகளுக்கு அடியில் மாவட்ட ஆட்சியரின் அனுமதி எண், தேதி, காலவரை இவையாவும் குறிப்பிட்டிருக்க வேண்டும், தவறும் பட்சத்தில் சட்டத்திற்கு புறம்பானது என கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் புனிதன், அம்முக ஒன்றிய செயலாளர் (கிழக்கு) ஜெயபிரகாஷ், தேமுதிக மாவட்ட துணை செயலாளர் தங்கஜெயபாலன், பாமக மாவட்ட தலைவர் ரவிசங்கர், உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

 • hurricane_12

  அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்