SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அங்கன்வாடி மையத்துக்குள் புகுந்து உணவுப்பொருட்களை அபகரிக்கும் குரங்குகள் குழந்தைகள், பொதுமக்கள் அச்சம்

2/22/2019 4:56:42 AM


பெரம்பலூர், பிப். 22: அருமடல் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி ைமயத்துக்குள் புகுந்து உணவுப்பொருட்களை அபகரித்து அச்சுறுத்தும் குரங்குகளை பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.
பெரம்பலூர் ஒன்றியம் செங்குணம் ஊராட்சிக்கு உட்பட்ட  அருமடல் கிராமத்தில் அரசு அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் ஒரு அங்கன்வாடி பணியாளரும், ஒரு உதவியாளரும் பணிபுரிந்து வருகின்றனர். 30 ஏழை குழந்தைகள் மழலையர் கல்வி பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையத்துக்கு மின் கம்பத்திலிருந்து வரும் மின்சார வயர்கள் பல ஆண்டுக்கு முன்பே இயற்கை சீற்றத்தால் அறுந்து விழுந்து  துண்டிக்கப்பட்டது. இதனால் அங்கன்வாடி மையம் மின்வசதியின்றி காணப்படுகிறது. மேலும் இம்மையத்துக்குள் எளிதாக குரங்குகள் உள்ளே செல்லும்படியாக கட்டிடத்தின் மேற்கூரை அமைப்பு உள்ளது. இதனால் அங்கன்வாடி மையத்தில் பகலில் நுழைந்து விடும் குரங்குகள் அருகிலுள்ள மரக்கிளைகளில் உட்கார்ந்திருந்து சாப்பாடு பரிமாறும் நேரங்களில் மையத்துக்குள் குதித்து  குழந்தைகளையும், பணியாளர்களையும் அச்சுறுத்தி உணவு பொருட்களை அபகரிக்கிறது.

இதுகுறித்து கடந்தாண்டு அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று செங்குணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற கலெக்டர் சாந்தாவிடம் அங்கன்வாடி மையத்துக்கு மின்வசதியை புதுப்பித்து, குரங்குகள் மையத்தின் உள்ளே செல்லாதவாறு கட்டிடத்தை சீரமைப்பதுடன் கூண்டு வைத்து குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டுமென அருமடல் கிராமமக்கள் கோரிக்கை  விடுத்தனர்.இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டரிடம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே குரங்குகளால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பே, ஏழை குழந்தைகள் பாதுகாப்பு நலன்கருதி மின்வசதியை புதுப்பித்து கட்டிடத்தை சீரமைக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்துக்கு பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: குப்பைகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள்

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

  • flyingtaxi

    ஜெர்மனியில் 5 இருக்கைகள் கொண்ட பறக்கும் டாக்ஸி அறிமுகம்: சோதனை ஓட்டம் வெற்றி

  • 20-05-2019

    20-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்