SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்லூரியில் 8ம் வகுப்பு சேர்க்கை தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்

2/22/2019 4:56:15 AM


பெரம்பலூர், பிப்.22:  டேராடூன் ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் 8ம் வகுப்பு சேர்க்கைக்குத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்.  இது குறித்து பெரம்பலூர் கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: டேராடூன் ராஷ்டிரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 8ம் வகுப்பில் சேர்வதற்கு தகுதியான ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். இக்கல்லூரியில் பயில்வதற்கான கல்வித்தகுதி 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜூன் மாதம் நடைபெறவுள்ள இத்தேர்விற்கு வயது வரம்பு பதினொன்றரை முதல் 13 வயதுக்குள் இருக்க வேண்டும்.அதாவது 2007 ஜனவரி 2ம்தேதிக்குப் பின்னரும் 2008 ஜூலை 1ம்தேதிக்கு முன்னதாகவும் பிறந்திருக்க வேண்டும்.  இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பொதுப் பிரிவினருக்கு ரூ.600ம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு ரூ.555க்கான வரைவோலையை (DD) The Comman dant, RIMC Dehradun-248003, Uttarkhand state என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். இது குறித்த மேலும் விவரங்களுக்கு www.rimc.org என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்