SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடை உழவு ஏக்கருக்கு ரூ.500 மானியம் விவசாயிகளுக்கு அழைப்பு

2/22/2019 4:56:07 AM

அரியலூர், பிப். 22: அரியலூர் வட்டம் புதுப்பாளையம் ஆலந்துரையார்கட்டளை மற்றும் காவனூர் வருவாய் கிராமத்தில் மானாவாரி நில மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 1.000 எக்டேர் நிலப்பரப்பில் கோடை உழவுப்பணி நடந்து வருகிறது. காவனூர் கிராமத்தில் அரியலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பூவலிங்கம் தலைமை வகித்து கோடை உழவின் நன்மைகளான மண்ணின் நீர் உயர்வது குறித்து எடுத்துரைத்தார். மண்மாதிரி மேற்கொள்ள வேண்டிய அவசியம், மண்மாதிரி மேற்கொண்டு பரிந்துரைக்கப்பட்ட உரங்கள் இடுவதால் செலவு குறைவு, மகசூல் அதிகரிப்பு குறித்து வேளாண் அலுவலர் சவிதா பேசினார். மேலும் இத்திட்டத்தின்கீழ் கோடை உழவு ஏக்கருக்கு ரூ.500 வழங்கப்படும் என்பதை தெரிவித்தார்.  மேலும் பண்ணைகுட்டை 30 மீ. நீளம், 30 மீ. அகலம் ஒன்றரை மீட்டர் ஆழத்தில் அமைத்து மழைநீர் சேகரிப்பதால் நீர்மட்டம் உயர்ந்து மானாவாரி பயிர்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு விருப்பமுள்ள விவசாயிகள் பெயர் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. துணை வேளாண் அலுவலர் இளவரசன், உதவி வேளாண் அலுவலர் வேல்முருகன் ஆகியோரும் பேசினர். காவனூர் பகுதியை சார்ந்த 50க்கு மேற்பட்ட விவசாயிகள் பயிற்சியில் பங்கேற்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

  • StalinElectionCampaign19

    தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

  • NorwayUnderRestaurant

    ஐரோப்பாவின் முதல் கடலுக்கடியில் இயங்கும் உணவகம்...நார்வே நாட்டில் துவக்கம்: பிரம்மிப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்