SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தகர கொட்டகையில் இயங்கும் துவக்கப் பள்ளி புதிய கட்டிடம் கட்டப்படுமா?

2/22/2019 4:54:05 AM

கொள்ளிடம், பிப்.22: கொள்ளிடம் அருகே எலத்தூரில் தகரக்கொட்டகையில் இயங்கும் தரமான துவக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோரமுள்ள எலத்தூர் கிராமத்தில் அரசு பெறும் துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. 45 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வரும் இந்த பள்ளி, சிறந்த பள்ளியாக இருந்து வருகிறது. இப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் சிறப்பாக உள்ளதாக அதிகாரிகளின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உட்கிராமமான எலத்தூரில் அமைந்துள்ள இப்பள்ளி சிறப்பாக நடைபெற்று வந்தாலும், இப்பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை தகரத்தால் வேயப்பட்டுள்ளது. இதனால் அதிக வெயில் காலங்களில் மேற்கூரை தகரத்தின் வெப்பம், உள்ளே உள்ள மாணவர்கள்  மற்றும் ஆசிரியர்களையும் பாதிக்கிறது. ஆனால் சிரமத்திற்கிடையே இந்தப்பள்ளி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இப்பள்ளிக்கான சத்துணவுக் கூடத்தை கூட அரசு சார்பில் கட்டிக்கொடுக்க யாரும் இதுவரை முன் வரவில்லை. அதனால் இங்கு வேலை பா ர்த்து வரும் சத்துணவு அமைப்பாளரின் சொந்த செலவி லேயே சத்துணவு மையத்திற்கு தகரத்தாலான மேற்கூரை அமைத்துள்ளார். எத்தனையோ பள்ளிகள் இன்று இழுத்து மூடும் நிலைக்கு வந்துள்ளன. கொள்ளிடம் வட்டாரத்தில் மட்டும் மாணவர்கள் பற்றாக்குறையால் 20 பள்ளிகள் விரைவில் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிறப்பாகவும் தரமாகவும் நடைபெற்று வரும் எலத்தூர் துவக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்