SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேதாரண்யம் அருகே டேங்கர் லாரி மோதி மீனவர் சாவு

2/22/2019 4:53:57 AM

வேதாரண்யம், பிப்.22: வேதாண்யம் அருகே டேங்கர் லாரி மோதியதில் சைக்கிளில் சென்ற மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வாய்மேடு மேற்கு பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம்  (60). மீனவர்.  இவர் வாய்மேடு கடைவீதிக்கு சென்றுவிட்டு மிதிவண்டியில்  வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.  துணைமின் நிலையம் அருகே சென்றபோது, அந்த  வழியாக சென்ற ஒரு  டேங்கர் லாரி மோதியதில்  சொக்கலிங்கம் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.  இதுகுறித்து வாய்மேடு போலீசார்  வழக்க பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலை விபத்தில் முதியவர் பலி: காரைக்கால் நெடுங்காடு குரும்ப கரம் பெருமாள் கோயிலை சேர்ந்தவர் மோகன்.(50) இவர் நேற்று முன்தினம் இரவு நெடுங்காடு கடைவீதிக்கு பைக்கில் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார் . அப்போது குரும்பகரம் அருகே எதிரே வந்த மினி லாரி பைக்கில் மோதியதில், மோகன் அதே இடத்தில் உடல் நசுங்கி இறந்தார். இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்து துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, குரும்ப கரத்தை சேர்ந்த முருகேசன் மகன் புவனேஷ் குமார் (28) கைது  செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்