SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2017-18ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

2/22/2019 4:53:32 AM

நாகை, பிப். 22: நாகையை அடுத்த பாலையூர் கிராம விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் 2017-18 ம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டுத் தொகை ரூ.306 கோடி தமிழக அரசால் ஒதுக்கிடு செய்யப்பட்டும் இது வரையிலும் விவசாயிகளுக்கு நியூ இந்திய இன்சூரன்சால் தொகை வழங்கப்படவில்லை. எனவே  பாலையூர் கிராம விவசாயிகளுக்கு உடனே இன்சூரன்ஸ் தொகையை வழங்கிட வேண்டும், 2016-2017ம் ஆண்டிற்கு பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு அரசால் அறிவிக்கப்பட்ட 100 சதவீதத்திற்கு பதில் 42 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதித் தொகை 58 சதவீதத்தையும் உடன் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி நாகையில் உள்ள நீயூ இந்திய இன்சூரன்ஸ் அலுவலகம் முன் சங்க தலைவர் கார்மேகம் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பாலசுப்பரமணியன், பரிமளச்செல்வன், அய்யாதேவர்,  சரபோஜி,  உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்